தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) ஊதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 13 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன, இது முந்தைய மாதத்தில் (ஜூலை) 14 லட்சமாக இருந்தது.

தொழிலாளர்கள் மட்டுமே, இ.எஸ்.ஐ. திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உரிய பலன்களை பெற்றுக்கொள்ளும் வசதி மத்திய அரசினரால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2018-19 ஆண்டில் புதிதாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1.49 கோடியாக இருந்தது என தேசிய புள்ளிவிவர ஆணையம் (NSO) தெரிவித்துள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, தொழிலாளர்கள் மாநில காப்பீடு கழகம் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாடு ஆணையம் ஆகியவற்றால் நடத்தப்படும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைக்கப்படும் புதிய உறுப்பினர்களின் ஊதிய தரவுகள் அடிப்படையில் இந்த அறிக்கையை தேசிய புள்ளிவிவர ஆணையம் உருவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 2018ஆம் ஆண்டு முதல் தனது அறிக்கையை வெளியிட்டு வரும் இந்த நிறுவனம், 2017 செப்டம்பர் முதல் 2018 மார்ச் வரையிலான தொழிலாளர்கள் மாநில காப்பீடு கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 83.3 லட்சமாக இருந்துள்ளது.
இந்தாண்டு ஆகஸ்ட் மாத புள்ளி விவரங்களை ஜூலை மாதத்தோடு ஒப்பிடும் போது, சுமார் 7 லட்சம் அதிகரித்திருக்கிறது. 2018-19 நிதியாண்டில் புதிய உறுப்பினர்களின் எண்னிக்கை 61 லட்சமாக இருந்துள்ளது. இதேபோல் செப்டம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரை நிகர் மதிப்பு 15 லட்சமாக இருந்துள்ளது.

செப்டம்பர் 2017 முதல் 2019 ஆகஸ்ட் வரை சுமார் 2.75 கோடி அளவிலான புதிய உறுப்பினர்கள் இபிஎஃப் திட்டத்தில் இணைந்திருப்பதை இது காட்டுகிறது.
இந்த அறிக்கை குறித்து தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் கூறுகையில், முறைப்படுத்ததப்பட்ட துறைகளில் உள்ள வேலைவாய்ப்பினை குறித்து பல கண்ணோட்டங்களை தருவதாகவும், வேலைவாய்ப்புகள் குறித்து முழுமையாக கணக்கிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.