தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் நடிகர் டி.ராஜேந்தர். தன்னுடைய காலத்தில் நிறைய வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர், இப்பொது உடல்நல குறைவால் பெரிதாக சினிமாவில் இல்லாமல் ஒதுங்கி உள்ளார். மகன் சிம்பு இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நாயகராக திகழ்ந்து வருகிறார்.

இருதய கோளாறு பிரச்னை காரணமாக கடந்த மாதம் இறுதியில் சிம்பு மற்றும் டி.ராஜேந்தர், மனைவி உஷாவுடன் வெளிநாட்டிற்கு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சில நாட்கள் முன்பு அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் அனைத்தும் முடிந்தது அவர் மேற்பார்வையில் இருக்கிறார் எண்ணற்ற செய்திகள் வெளியாகின

அமெரிக்காவில் நடைபெற்று வந்த சிகிச்சைகள் முடிந்து இப்பொது டி.ராஜேந்தர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். விரைவில் அவர் பூரண உடல் நலம் போறும் பட்சத்தில் அவரும் மற்ற குடும்பத்தாரும் இந்திய திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது சிம்பு மற்றும் டி.ராஜேந்தர் இருவரின் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இப்பொது புது வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. சிகிச்சை முடிந்து நடிகர் டி.ராஜேந்தர் தன்னுடைய மகன்கள் சிம்பு மற்றும் குறளரசனுடன் இருக்கும் இந்த வீடியோவில் உடன் குறளரசனின் மகனும் உடன் இருக்கிறார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது “பத்து தல” படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். சிம்புவின் நடிப்பில் அடுத்து “வெந்து தணிந்தது காடு” படம் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Video Courtesy – ARG Editz