இந்தியர்கள் குறைந்து செயல்படுகிறார்கள்…!

இந்தியர்கள் குறைந்து செயல்படுகிறார்கள்...! 1

இந்தியர்கள் தான் குறைந்து செயல்படுவதாக (லீஸ்ட் ஆக்டிவ்) அமெரிக்காவை தளமாகக் கொண்ட உடற்பயிற்சி தீர்வுகள் நிறுவனமான (ஃபிட்னஸ் சொல்யூஷன்ஸ் ஃபர்ம்) ஃபிட்பிட் கூறியுள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளை உள்ளடக்கிய 18 நாடுகளில் இந்தியா தான் குறைந்து செயல்படும் நாடாக உருவெடுத்துள்ளதாகவும் தினசரி இந்தியர்கள் சராசரியாக 6,533 அடிகள் தான் நடந்து செல்கிறார்கள் என்றும் ஃபிட்பிட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மிக அதிகமாக செயல்படும் நாடான சிங்கப்பூரின் சராசரியை விட 3600 அடிகள் குறைவாக இந்தியர்கள் செயல்படுகிறார்கள் என்றும் கூறப்படுறது.

விளம்பரம்

மேலும் இந்தியா தான் ஜப்பான் நாட்டுக்கு அடுத்து இரண்டாவது தூக்கம் இல்லாமல் இருக்கும் நாடாக கூறப்படுகிறது. சராசரியாக இரவில் 7 மணி 1 நிமிடம் தூங்குவதாக செவ்வாயன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியர்களின் தூக்கம் இங்கிலாந்து பயனர்களின் சராசரி இரவு தூக்கத்தை விட 48 நிமிடங்கள் குறைவாகவும், அமெரிக்கர்களின் சராசரி இரவு தூக்கத்தை விட 32 நிமிடங்கள் குறைவாகவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. அயர்லாந்து தான் நன்றாக தூக்கம் உள்ள நாடாகவும் இரவில் 7 மணி 57 நிமிடங்கள் தூங்குவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடையவை  நம்முடைய தலைமுடியை வானிலை மாற்றங்களில் இருந்து காப்பது எப்படி?

ஜப்பானைப் போலவே இந்தியர்கள் சராசரியாக 77 நிமிடங்களில் (குறைந்தது) விரைவான கண் இயக்கம் தூக்கம் பெறுகிறார்கள். விரைவான கண் இயக்கம் தூக்கம் என்பது உணர்ச்சி கட்டுப்பாடு, நினைவகம் மற்றும் செல்லுலார் மட்டத்தில் புரத தொகுப்பின் உச்ச கட்டத்திற்கு ஒரு முக்கியமான அம்சமாகும், இது உடலில் பல செயல்முறைகள் சரியாக செயல்படுவதை உறுதி செய்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment