சின்னத்திரையில் இப்பொது மிக பிரபல தொடர் என்றால் அது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தான். ஆரம்பத்தில் குடும்ப பெண் ஒருவரின் அன்றாட கஷ்டங்களை விளக்கும் தொடராக துவங்கப்பட்டு நடுவில் கொஞ்சம் ட்ராக் மாறியது. கல்யாணமாகி 2 மகன்கள், ஒரு மகள் என இருக்கும் நாயகன் கோபியின் வாழ்வில் வரும் பழைய கல்லூரி காதலி ராதிகாவின் என்ட்ரி மொத்த சீரியலின் போக்கையும் மாற்றியமைத்தது.

மனைவிக்கு தெரியாமல் அவளிடம் இருந்து பிரிந்து சென்று பழைய காதலியை கரம் பிடிக்க நினைக்கும் கணவன், கணவர் செய்த துரோகம் தங்க முடியமால் தவிக்கும் மனைவி, சினேகிதியின் கணவரை காதலித்து விட்டு தவித்து வரும் ராதிகா, என்ன செய்வது என தெரியாமல் தவித்து வரும் குடும்பத்தார் என தொடரே இப்பொது மற்றொரு உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் தான் சன் டிவி சீரியல் டப் கொடுத்து வருகிறது.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா கேரக்டரில் சுசித்ரா நடித்து வருகிறார்.இந்த சீரியலில் இவரின் சிறந்த நடிப்பால் தற்பொழுது இவருக்கென எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு இந்த சீரியலின் மூலம் பிரபலம் அடைந்துள்ள இவருக்கு தற்பொழுது பிரபல முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர், இயக்குனர், நடனக்கலைஞர் என பன்முகம் கொண்ட பிரபுதேவா நாயகனாக நடித்துவரும் அடுத்த படத்தில் தான் சுசித்ரா அவருக்கு தாயாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர்கள் நடிக்க உள்ள திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலை இரு சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பாக் கியாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
