“இந்த சர்ச்சைக்குரிய கதையை அடுத்த கையிலெடுத்துள்ளாரா ஜெய் பீம் இயக்குனர்”!!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் “ஜெய் பீம்”. ஒடுக்கப்பட்ட ஒரு மக்களுக்காக போராட்டம் நடத்திய ஜஸ்டிஸ். திரு. சந்துரு அவர்களின் ஒரு சட்ட போராட்ட கதையை மையமாக கொண்டு மிகவும் நேர்த்தியாக சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் டி.ஜே. ஞானவேல். OTT தளத்தில் வெளியான இந்த படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி நிறைய விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

"இந்த சர்ச்சைக்குரிய கதையை அடுத்த கையிலெடுத்துள்ளாரா ஜெய் பீம் இயக்குனர்"!! 1

விளம்பரம்

தவறுதலாக கூட்டிக்கொண்டு போய் சாகடிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த கணவரை மீட்டு தர போராடும் மனைவி செங்கனி, அவளுக்கு துணையாக நிற்கும் அந்த ஊர் டீச்சர், உதவி புரிந்து உண்மையை வெளிக்கொண்டுவரும் வக்கீல் ஜஸ்டிஸ் . திரு. சந்துருவாக சூர்யா, அடித்து கொன்றுவிட்டு நாடகமாடும் 3 போலீஸ்காரர்கள், காக்கஉதவும் நல்ல போலீசாக பிரகாஷ் ராஜ் என அனைத்து கதாபாத்திரங்கள் மொத்தமே மனதில் நிற்கும் அளவிற்கு சிறப்பாக நேர்த்தியாக செதுக்கி இருந்தார் இயக்குனர் டி.ஜே. ஞானவேல்.

"இந்த சர்ச்சைக்குரிய கதையை அடுத்த கையிலெடுத்துள்ளாரா ஜெய் பீம் இயக்குனர்"!! 3

விளம்பரம்

இந்த படத்தை தொடர்ந்து இப்போது இயக்குனர் டி.ஜே. ஞானவேல் அடுத்த படத்திற்கு தயராகி வருகிறார். தற்போது அவர் கையில் எடுத்துள்ளதும் சர்ச்சைக்குரிய கதைக்களம்தானாம். அதாவது, மறைந்த தொழிலதிபரான “சரவணா பவன்” ராஜகோபால் வாழக்கையில் மையமாக வைத்து தான் இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். 2001ஆம் ஆண்டு ஜீவஜோதி எனும் பெண்ணை மறுமணம் செய்துகொள்ளும் நோக்கில் அவரது கணவரைக் கடத்திக் கொலை செ‌ய்ததாக ராஜகோபால் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு ராஜகோபால் காலமானார்.

தொடர்புடையவை  புஷ்பான்னா நேஷனல் இல்லடா இன்டர்நேஷனல்..! மிரட்டலாக வெளியாகிய புஷ்பா 2 ட்ரைலர் இதோ..!

"இந்த சர்ச்சைக்குரிய கதையை அடுத்த கையிலெடுத்துள்ளாரா ஜெய் பீம் இயக்குனர்"!! 5

விளம்பரம்

தமிழக மக்களிடம் மிகவும் பரிட்சயமடைந்த உணவகம் என்றால் அது சரவணா பவன். சென்னை துவங்கி அனைத்து மிக முக்கிய ஊர்களிலும் கிளைகள் இவருக்கு உண்டு. தமிழக மக்கள் ஏதோ ஒரு நாள் அவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது அவர்களின் ஹோட்டல்களில் சாப்பிட்டு விடுவார்கள். அவ்வாறு பிரபலமாக இருக்கும் இந்த குழுமத்தின் தலைவர் தான் ராஜகோபால். பெரிய பெரிய மனிதர்கள் வாழ்வில் ஏதோ ஒரு கரும்புள்ளி அமைந்து விடும் என்பது இவர் வாழ்விலும் ஜீவஜோதி விவகாரத்தில் நடந்தேறியது.

"இந்த சர்ச்சைக்குரிய கதையை அடுத்த கையிலெடுத்துள்ளாரா ஜெய் பீம் இயக்குனர்"!! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment