2020 ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கு இந்தியாவின் ஆண்கள், பெண்கள் அணி தகுதி!!

2020 ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கு இந்தியாவின் ஆண்கள், பெண்கள் அணி தகுதி!! 1

ஜப்பானின் டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. அதில் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடந்தது. அதில் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியினர்கள் வென்று 2020 ஒலிம்பிக் போட்டிக்குள் நுழைந்தது.

பெண்களுக்கான ஹாக்கியில் முதல் தகுதி சுற்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையே நடந்தது. அதில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றனர். 5 -1 கோல் கணக்கில் அமெரிக்காவைத் தோற்கடித்தனர். பின்பு நேற்று நடைபெற்ற இரண்டாம் தகுதி சுற்றில் 5 அல்லது அதற்கு மேல் கோல் அடித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய அமெரிக்க அணி அடுத்தடுத்து கோல் போட்டு இந்தியாவை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். முதலில் திணறிய இந்திய அணி பின்பு சுதாகரித்துக் கொண்டு அவர்களை மேலும் கோல் போடதவாரு ஆடினர். இந்தியாவின் கேப்டன் ராணி ராம்பால் அவர்கள் ஒரு கோலை அடித்து வெற்றியை நோக்கி அணியைக் கொண்டு சென்றார். இறுதியில் 1 – 4 கணக்கில் இந்தியா தோற்றது. இருப்பினும் இரண்டு தகுதி சுற்றிலும் 6 – 5 என்ற கோல் கணக்கில் இந்தியா அமெரிக்காவை வென்று 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது.

விளம்பரம்
தொடர்புடையவை  உலக மல்யுத்தம் போட்டி: சுசில் குமார் தோல்வி

முன்னாள் சாம்பியனான இந்தியாவின் ஆண்களுக்கான ஹாக்கி அணி முதல் தகுதி சுற்றில் 4 – 2 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவைத் தோற்கடித்தது. பின்பு நேற்று இரவில் இரண்டாவது தகுதி சுற்று அதே அணிகளுக்கு இடையே நடந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் கோலை ரஷ்யா அடித்தாலும் பிறகு இந்திய அணி அபாரமாக விளையாடி கோல் மழைகளைப் பொழிந்தனர். ரஷ்யாவை அசத்தாலாக 7 – 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா இதிலும் வென்றது. ஆதலால் இரண்டு தகுதி சுற்றிலும் மொத்தமாக 11 – 3 என்ற கோல் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது.

விளம்பரம்

Leave a Comment