தொகுப்பாளினியாக, செய்தி வாசிப்பாளராக மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் அனிதா. பிரபல தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே நல்ல மக்கள் அறிமுகத்தை கொண்ட இவர், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டே இருந்தார். சன் டிவியின் மிகவும் சிறப்பாக ஒளிபரப்பான “வணக்கம் தமிழா” நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலம் அடைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த இவர் பிரபாகரன் என்பவரை 2019ஆம் ஆண்டு காதலித்து திருமண செய்து கொண்டார். சோசியல் மீடியா தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ் புக் போன்ற தளங்களில் மிகவும் ரசிகர்கள் அதிகம்.

அந்த வகையில் சில இடங்களில் அறிமுகமாகி இருக்கும் நபர்களை தங்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிக பெரிய அளவில் கொண்டு சேர்த்து வரும் விஜய் டிவி இவரையும் பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக களமிறங்கியது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மிக பெரிய அளவில் பிரபலமடைந்தார் இவர். இந்த நிகழ்ச்சி கொடுத்த அறிமுகம் இவர் இப்பொது படங்களிலும் நடிக்க துவங்கி வருகிறார்.

சின்னத்திரையிலும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள், ப்ரோக்ராம்கள், சீரியல்களில் இப்பொது இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்பொது சோசியல் மீடியாக்களில் பிரபலமாகி வரும் home tour போன்ற தங்களின் வீட்டை சுற்றி காற்றும் விடியோ போல இப்போது கணவர் பிரபாகரும், அனிதா சம்பத்தும் தங்கள் புதியதாக வாங்கியுள்ள வீட்டை சுற்றி காண்பித்துள்ளார்கள்.

சிறு வயது முதல் கண்ட கனவை இப்பொது நினைவாக்கி கொண்டுள்ள இவரின் இந்த விடீயோவின் கடைசியில் இவர், “நாங்க ரெண்டு பேருமே சின்ன வயசுல கண்ட கனவு இது, மாடி வீட்டுக்கு ஏறி போறதே பெரிய சந்தோசமா இருந்த போது, இப்போ நாங்களே இந்த வீட்டை வாங்கியிருக்கோம்” என நெகிழ்ச்சியாக பேசி வீடியோ வெளியிட்டுளளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Video Courtesy – Anitha Sampath Vlogs