லெஜெண்ட் படம் தேவலாம்..நல்லா தூங்கிட்டேன்..குளு குளு படத்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் குளுகுளு. இந்த படத்தை பார்க்க வந்த பலரும் பாதியிலேயே எழுந்து வெளியில் ஓடிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமானவர் சந்தானம். பின்னர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த அவர், பிரபல காமெடியனாக வலம் வந்தார். பின்னாளில் காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு, ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை. அவர் தற்போது ஹீரோவாக நடித்துள்ள ஒரு படம்தான் குளுகுளு. இந்த படத்தை மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

லெஜெண்ட் படம் தேவலாம்..நல்லா தூங்கிட்டேன்..குளு குளு படத்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. காணாமல் போன தனது நண்பனை கண்டுபிடிப்பதற்காக ஊர் ஊராக சுற்றித் திரியும் நண்பர்கள் சிலர், ஒரு ஊதாரியாய் இருக்கும் சந்தானத்திடம் உதவி கேட்கிறார்கள். சந்தானம் அந்த நண்பரை கண்டுபிடிக்க எவ்வாறு உதவினார் என்பது இந்த படத்தின் கதை. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை சந்தானத்தின் நண்பருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் திரையரங்குகளில் இன்று வெளியிடப்பட்டது.

தொடர்புடையவை  ரொம்ப பிளேடு போட்டுட்டோம்..! மெய்யழகன் படத்தின் நீளத்தை குறைத்த படக்குழு...! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

லெஜெண்ட் படம் தேவலாம்..நல்லா தூங்கிட்டேன்..குளு குளு படத்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள் 3

விளம்பரம்

படம் முடிந்து வெளியே வந்த மக்களிடம் கருத்து கேட்டபோது, படம் காமெடியாக இருக்கும் என்று நினைத்து வந்தோம் ஆனால் டார்க் காமெடி செய்கிறேன் என்று சொல்லி தலைவலியே வந்துவிட்டது. காமெடி சுத்தமாக இல்ல, படம் சுத்த வேஸ்ட், மிகவும் மொக்கையாக இருக்கிறது என்று பலரும் படத்தை கழுவி ஊற்றினர். மேலும் சந்தானத்தின் ரசிகர்கள் மட்டுமே படம் நன்றாக இருப்பதாகவும் ஒரு முறை பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். ஹீரோவாக நடிப்பேன் என்று சந்தானம் அறிவித்து வெளிவந்த அனைத்து படங்களுமே தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Dinamalar

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment