சீரியல் ஒளிபரப்புவதில் கோடிக்கட்டி பறந்தது சன் டிவி. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக அந்த இடத்தை இழந்து விட்டது சன் டிவி. அதற்கு முக்கிய காரணம் பல்வேறு புது வகையிலான தொடர்களுடன் களமிறங்கிய விஜய் டிவியே. காண காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற பல வெற்றி நாடகங்களை ஒளிபரப்பி இப்பொது முதல் இடத்தில உள்ளது விஜய் டிவி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய ரசிகர்களின் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் என்றால் பலரும் விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் ஏதோ ஒரு தொடரை தான் கூறுவார்கள். அவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. எப்போதும் டிஆர்பியில் முதலில் இல்லை என்றாலும் எதோ ஒரு இடம் பெற்றுவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த தொடர் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல விஜய் டிவியின் மற்றொரு முன்னணி தொடர் “ராஜா ராணி 2”. முதல் சீசன் மிக பெரிய அளவில் வெற்றியடைந்த பிறகு இப்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழில் “என் கணவன் என் தோழன்” என்ற பெயரில் விஜய் டிவியிலேயே நீண்ட ஆண்டுகள் முன்பு ஒளிபரப்பான இந்த தொடரை மீண்டும் தமிழில் மறுக்கம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். இதற்கும் எப்போதும் போல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சில காலமாக அறிமுகமாகி வெற்றியடைந்த கான்செப்ட் சீரியல் சங்கமம். அந்த வகையில் இப்பொது பாரதி கண்ணம்மா – ராஜாராணி சங்கமம் நடைபெற்று வருகிறது. ராஜா ராணி தொடரில் நாயகியை விட மிகவும் பிரபலமாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா தான். குடும்பத்தில் எதாவது ஒரு வகையில் பிரச்சனையை செய்து வரும் கதாபாத்திரமாக வந்தாலும், நகைச்சுவையுடன் கலந்து வரும் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் சாமியாரின் பொய் மற்றும் பித்தலாட்டத்துக்கு முடிவு கட்டப்படுகிறது. அதாவது, போலி சாமியாரை கண்ணம்மாவும் சந்தியாவும் கண்டுபிடித்து பொதுமக்களிடம் சாட்சியுடன் நிரூப்பிக்கிறார்கள்.சாமியார் பேசிய வீடியோவை சந்தியா எல்லோருக்கும் காட்டி விட்டார். இதனால் அனைவரும் சாமியாரின் உண்மை முகத்தை கண்டுகொள்கிறார்கள்.
இப்பொது ஹேமாவின் பிறந்தநாள் விழா கொண்டாடும் போது, அவளின் அம்மாவின் புகைப்படம் என ஒருவரின் போட்டோவை அங்கு எல்லோருக்கும் காண்பிக்கிறான் பாரதி. இதனை கண்டு அதிர்ச்சியுடையும் கண்ணம்மா, எனக்கு இரண்டு குழந்தைகள் அதில் ஒன்று தான் ஹேமா என அவள் கூற, பாரதி அம்மாவிடம் முறையிட பாரதியின் அம்மா உண்மையை கூறிவிடுகிறாள். அதிர்ச்சியில் உறைகிறான் பாரதி. இந்த ப்ரோமோவை இப்பொது விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Video Courtesy – Vijay television