வாரிசு படத்திற்கு கடும் எதிர்ப்பு..நிறுத்தப்பட்டதா ஷூட்டிங்? தளபதிக்கு வந்த அடுத்த தலைவலி

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு தெலுங்கு உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழின் முண்ணனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கின் முண்ணனி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் சென்னையில் இருந்து அடிக்கடி விசாகப்பட்டினத்திற்கும், சென்னைக்கும் மாறி மாறி சென்று வந்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் காட்சிகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வந்தது. சண்டை காட்சிகள், பாடல்கள் என ஒவ்வொன்றாக வெளியாகி வந்தது விஜய் ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியது.

வாரிசு படத்திற்கு கடும் எதிர்ப்பு..நிறுத்தப்பட்டதா ஷூட்டிங்? தளபதிக்கு வந்த அடுத்த தலைவலி 1

விளம்பரம்

இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். விஜய் படத்திற்கு முதன் முதலாக தமன் இசையமைக்கிறார். விஜய் கடைசியாக நடித்த படம் பீஸ்ட். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வி அடைந்து இருந்தது. இந்தப் இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை விஜய் ரசிகர்கள் வச்சி செய்து விட்டனர். அதனால் அடுத்த படத்தை மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் விஜய் இந்த படத்திற்குப் பிறகு தளபதி 67 என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது தளபதி 66 படம் ஆன வாரிசு படத்திற்கு ஒரு புதிய சிக்கல் எழுந்து இருக்கிறது. அது என்னவென்றால் வாரிசு படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  நான் பெண்களை எப்போதும் மதிப்பவன்!இயக்குனர் பாக்யராஜ்!!

வாரிசு படத்திற்கு கடும் எதிர்ப்பு..நிறுத்தப்பட்டதா ஷூட்டிங்? தளபதிக்கு வந்த அடுத்த தலைவலி 3

விளம்பரம்

தெலுங்கு ஹீரோக்களின் சம்பளம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போர் கொடி தூக்கி கொண்டுள்ளனர். இதனால் ஹைதராபாத்தில் ஷூட்டிங் எதுவும் நடைபெறாமல் தடைபட்டுள்ளது. இந்த சர்ச்சை முடிவுக்கு வந்த பின்னரே படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வாரிசு திரைப்படம் தெலுங்கிலும் உருவாகி வருவதால் அதன் சூட்டிங்கையும் நிறுத்த வேண்டும் என்று கடுமையான எதிர்ப்பை தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாரிசு படத்தின் தயாரிப்பாளர் ராஜு இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் வாரிசு படம் தமிழ் படம் தான். தமிழில் எடுக்கப்பட்டு பின்னர் வரசுடு என்ற பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் மட்டுமே செய்யப்படுவதாகவும், அது முழு தெலுங்கு படம் அல்ல, அசல் தமிழ் படம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இந்த விளக்கத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கவில்லை. இதனால் வாரிசு படம் ஷூட்டிங்கில் சிக்கல் எழுந்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment