ஜெய்ஹிந்த் கூட சொல்ல மாட்டாராம்..ஆனா தேசிய விருது மட்டும் வேணுமாம்..சூர்யா மீது வன்மத்தை கொட்டும் சிலர்

தேசபற்றே இல்லாத சூர்யாவுக்கு எதற்கு தேசிய விருது என்று புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. சமீபத்தில் வெளியாகி இருந்த ராக்டெரி நம்பி விளைவு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் சூர்யா. அந்த படத்தில் விஞ்ஞானி நம்பியை பேட்டி எடுக்கும் காட்சியில் அவர் நடித்து இருத்தார். இந்த படத்தை மாதவனே இயக்கி நடித்து இருந்தார். இஸ்ரோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் இஸ்ரோவில் திட்டங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை பணி நீக்கம் செய்தனர். ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார் நம்பி நாராயணன். அவரின் நிஜ வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க விரும்பிய மாதவன் ராக்டெரி நம்பி விளைவு என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அதில் இரண்டாம் பாகத்தில் உண்மையிலேயே நடிப்பில் அசத்தியிருந்தார் மாதவன். நம்பியாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வந்தனர்.

தொடர்புடையவை  ஒரு Body..! நாலு Lady..! Prabhudeva மற்றும் Madonna sebastin இணைந்து கலக்கும் ஜாலியோ ஜிம்கானா படத்தின் ட்ரைலர் இதோ..!

ஜெய்ஹிந்த் கூட சொல்ல மாட்டாராம்..ஆனா தேசிய விருது மட்டும் வேணுமாம்..சூர்யா மீது வன்மத்தை கொட்டும் சிலர் 1

விளம்பரம்

இந்த படத்தில் நம்பியை பேட்டி எடுப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதில் தமிழில் பேட்டி எடுப்பவராக சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்து இருந்தார். ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து இருந்தார். ஹிந்தியில் பேட்டியின் முடிவில் நம்பி நாராயணன் ஜெய்ஹிந்த் என்று சொல்ல, பதிலுக்கு ஷாருக்கானும் ஜெய்ஹிந்த் என்று சொல்லுவார். ஆனால் தமிழில் நம்பி ஜெய்ஹிந்த் சொல்லும் போது சூர்யா பதிலுக்கு ஜெய்ஹிந்த் சொல்லியிருக்க மாட்டார். இதை பார்த்துவிட்ட காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் சூர்யா இந்தியா வாழ்க, ஜெய்ஹிந்த் என்று கூறமாட்டாரா? ஹிந்தி தெரியாத காரணத்தால் அந்த வார்த்தையை சொல்லவில்லையா? எனில் அவருக்கு இலவசமாக ஹிந்தி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் காயத்திரி ரகுராம் ஒரு ட்வீட் ஒன்றையும் அவர் போட்டு இருந்தார், அதில், “ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டயலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

தொடர்புடையவை  கோலாகலமாக நடைபெற்ற சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்..! முதல் ஆளாக கலந்துகொண்ட கயல் சைத்ரா ரெட்டி..!

ஜெய்ஹிந்த் கூட சொல்ல மாட்டாராம்..ஆனா தேசிய விருது மட்டும் வேணுமாம்..சூர்யா மீது வன்மத்தை கொட்டும் சிலர் 3

விளம்பரம்

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவிற்கு சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு சூர்யாவும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ராக்கெட்ரி படத்தில் சூர்யா ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையே சொல்லாததற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேசபக்தியே இல்லாத சூர்யாவிற்கு எதற்கு தேசிய விருது? என்றும் ஜெய்ஹிந்த் சொல்லவே தயங்கும் சூர்யாவிற்கு எதற்காக தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்ஹிந்த் கூட சொல்ல மாட்டாராம்..ஆனா தேசிய விருது மட்டும் வேணுமாம்..சூர்யா மீது வன்மத்தை கொட்டும் சிலர் 5

விளம்பரம்

ஜெய்ஹிந்த் கூட சொல்ல மாட்டாராம்..ஆனா தேசிய விருது மட்டும் வேணுமாம்..சூர்யா மீது வன்மத்தை கொட்டும் சிலர் 7

விளம்பரம்

Leave a Comment