நடிகர் பகத் பாசில் இன்று தனது 40 ஆவது பிறந்த நாளை தனது மனைவி நஸ்ரியா உடன் இணைந்து கொண்டாடி வருகிறார். அந்தப் புகைப்படங்களை அவரது மனைவி நஸ்ரியா தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. எர்ணாகுளத்தில் பிறந்து வளர்ந்த பகத் பாசனின் தந்தை, ஃபாசில் பிரபல இயக்குனர் ஆவார். எர்ணாகுளத்தை பூர்வீகமாக கொண்ட பகத் பாஸில் இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் ஓர் நடிகராக மாறிவிட்டார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தனது நடிப்பை வெளிப்படுத்தும் அவரை ‘நடிப்பு அரக்கன்’ என்றெல்லாம் ரசிகர்களால் போற்றப்படுகிறார். இவர் கண்ணாலேயே நடித்து விடுவார் என்று பலர் கூறுவது உண்டு. 19ஆவது வயதில் தனது தந்தை பாசில் இயக்கிய ‘கையேதும் தூரத்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததால் நடிப்பில் இருந்து ஏழு ஆண்டுகள் விலகி இருந்தார். பின்னர் தனது கல்வியை தொடர்வதற்காக அமெரிக்கா சென்று விட்டார். 2009 ஆம் ஆண்டு வெளியான கேரளா கஃபே என்ற திரைப்படம் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

2013 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் தானும் பாடகி ஆண்ட்ரியாவும் காதலித்து வருவதாக கூறியிருந்தார். ஆனால் திடீரென நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘கும்பலங்கி நைட்ஸ்’ படம் பெரிதும் பேசப்பட்டது. சைக்கோ கதாபாத்திரமாக நடிப்பில் அசத்தியிருப்பார். மேலும் இவர் நடித்த பெங்களூர் டேஸ், டிரான்ஸ் போன்ற படங்கள் பெரிதும் பேசப்பட்டவை ஆகும். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இறுதியாக வெளிவந்த விக்ரம் படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் தனியார் அமைப்பின் உளவாளியாக இருக்கும் இவர், முகமூடி கொள்ளையர்களை தேடும் உளவாளியாக நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் பகத் பாசலின் தமிழ் ரசிகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்று பகத் பாசிலின் 40வது பிறந்த நாளை ஒட்டி அவருக்கு அவரது மனைவி நஸ்ரியா கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது கணவர் ஒயின் போன்றவர் என்றும், வயது ஆக மிகச் சிறப்பாக காணப்படுவதாகவும், அவருக்கு இன்னும் வர வேண்டியது நிறைய உள்ளது என்றும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
பகத் பாசில் அடுத்ததாக தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்திலும், தேவர்மகன் 2 படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் மலையாளத்தில் மலையான் குஞ்சு என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அது இன்னும் சில தினங்களில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
