நயன் விக்கி திருமண வீடியோ.! புது வீடியோ வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம்..!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் திருமண வீடியோ குறித்த ப்ரோமோ ஒன்றை netflix இணையதளம் தற்போது வெளியிட்டுள்ளது. கேரளாவில் பிறந்து வளர்ந்த நயன்தாரா ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்துக்கு பின்னர் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் 75 படங்களுக்கும் மேல் நடித்து புதிய சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது அவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ்வனுக்கும் கடந்த ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நயன் விக்கி திருமண வீடியோ.! புது வீடியோ வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம்..! 1

விளம்பரம்

போடா போடி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன், இவர் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார். இந்த படத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சென்னையில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த், மணிரத்னம், ஏ.ஆர் ரகுமான், சூர்யா, ஜோதிகா, அனிருத் என தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களும் வந்திருந்தனர். இவர்களின் திருமணத்தின் போது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது, ஆடைக் கட்டுப்பாடு, செல்போன் கொண்டு வரக்கூடாது, கியூ ஆர் கோடை காண்பித்த பின்பு தான் உள்ளே வரவேண்டும், பத்திரிகை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று பல கெடுபிடிகள் காட்டப்பட்டிருந்தது. இதற்கு காரணம் இவர்கள் திருமணத்தை ஒரு ஓடிடி தளத்திற்கு விற்றது தான்.

தொடர்புடையவை  ஆர்யா மகளின் 2-வது பிறந்தநாள்.! மும்பையில் உள்ள வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய ஆர்யா.! இதோ வீடியோ.!

நயன் விக்கி திருமண வீடியோ.! புது வீடியோ வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம்..! 3

விளம்பரம்

இந்தியாவில் இருக்கும் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், இவர்களது திருமணத்தை வாங்கி ஒளிபரப்ப திட்டமிட்டது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியிருந்தால், இப்படியான கெடுபிடிகள் காட்டப்பட்டதாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் 250 கோடிக்கு அவர்களின் திருமண வீடியோ விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த திருமண வீடியோவை பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். திருமணம் ஆகி ஒரு மாத காலம் ஆகியும் இவர்களின் வீடியோ வெளியிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். எனவே ஒரு ஒரு போட்டோவாக விக்னேஷ் நயன்தாரா தம்பதிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர். இதனால் நிறுவனம் கடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இரண்டு மாதங்கள் கழித்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோ குறித்த ஒரு ப்ரோமோவை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below Video…

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Netflix Shorts India

விளம்பரம்

Leave a Comment