எந்த டெலிவரி பாய் ராயல் என்பீல்ட்ல வராங்க? இதுல 3 காதலி வேற..! தனுஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தான் தனுஷ். இவர் ஆரம்பத்தில் படங்களில் நடிக்க வந்த போது பலராலும் விமர்சிக்கப்பட்டார். இவரது ஒல்லியான உருவத்தினால் இவர் பலரால் உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத தனுஷ் தொடர்ந்து உழைத்து வந்தார். தற்பொழுது மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். தென்னிந்திய மொழிகள் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் கலக்கிய தனுஷ், தற்போது ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்து விட்டு வந்திருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் திருச்சிற்றம்பலம் .இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மித்ரன் ஜவஹருடன் கைகோர்த்துள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தனுஷ் உடன் இணைந்துள்ளார் அனிருத். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. தனுஷ் படங்களுக்கும் பைக்-களுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புண்டு. தனது படங்களில் ஒரு பைக்கை சென்டிமென்டாக காட்டுவது தனுஷின் வழக்கமாகவே இருந்து வருகிறது.

தொடர்புடையவை  பள்ளி Sports Day-வில் கோப்பைகளை வாங்கி குவிக்கும் தனுஷ் மகன்கள்.! ஐஸ்வர்யா பதிவிட்ட புகைப்படங்கள்.!

எந்த டெலிவரி பாய் ராயல் என்பீல்ட்ல வராங்க? இதுல 3 காதலி வேற..! தனுஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. 1

விளம்பரம்

யாரடி நீ மோகினி படத்தில் தந்தை ரகுவரன் இறந்த பிறகு அவரது பஜாஜ் ஸ்கூட்டரை எடுத்துச் செல்லும் காட்சியில் நம்மை கண்கலங்க வைத்திருப்பார். பொல்லாதவன் படத்தில் பல்சர் பைக்கை ஓட்டிக்கொண்டு மாஸ் காட்டி இருப்பார். அதேபோல வேலையில்லா பட்டதாரி படத்தில் டிவிஎஸ் 50க்கு முந்தைய மாடல் பைக்கை வைத்துக் கொண்டு என் வண்டியை பெட்ரோல் இல்லை என்றாலும் பெடல் செய்து கொண்டே ஓட்டி விடுவேன் என்று வசனங்கள் பேசி இருப்பார். இந்த படங்கள் எல்லாமே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த காட்சிகளை இன்றும் விரும்பி பார்க்கும் பார்க்கும் ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் டெலிவரி பாயாக நடித்துள்ளார் தனுஷ். ட்ரைலர் வெளியான பிறகு இந்தப் படத்தின் தனுஷின் கதாபாத்திரத்தை பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

எந்த டெலிவரி பாய் ராயல் என்பீல்ட்ல வராங்க? இதுல 3 காதலி வேற..! தனுஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. 3

விளம்பரம்

அதில் தனுஷ் ராயல் என்ஃபீல்டு என்ற உயர் ரக பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்யும் பாயாக நடித்துள்ளார். ராயல் என்ஃபீல்டு ரக பைக்குகள் குறைந்தபட்சம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விலையில் சந்தையில் விற்கப்படுகின்றன் ஆனால் ஒரு டெலிவரி பாயாக நடிப்பவர் 2 லட்சம் மதிப்புள்ள ஒரு பைக்கில் சென்று உணவு டெலிவரி பண்ணுவதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். ஏற்கனவே வேலையில்லா பட்டதாரி படத்தில் அவர் ஒரு கால் சென்டரில் வேலை பார்க்கும் பொழுது 50,000 சம்பளம் வாங்குவது போல் காட்டி இருப்பார்கள். அதை மேற்கோள் காட்டி ஐயையோ இவரா இவர் கால் சென்டர் வேலையிலேயே 50 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆச்சே என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் வேலையே இல்லாத இவருக்கு மூன்று காதலிகள் வேறு என்று ஹீரோயின்கள் பற்றியும் கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடையவை  குடிபோதையில் பெண்ணின் தங்கை கழுத்தில் மாலையை போட்ட மாப்பிள்ளை..அடித்து துவைத்த பெண்ணின் தங்கை

எந்த டெலிவரி பாய் ராயல் என்பீல்ட்ல வராங்க? இதுல 3 காதலி வேற..! தனுஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. 5

விளம்பரம்

இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், அவர் ஒன்றும் ஏழை வீட்டு பையன் இல்லை அவருடைய அப்பா போலீஸ். ஆனால் அப்பாவை நம்பி இல்லாமல் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் இவ்வாறு உணவு டெலிவரி பாயாக செய்து வேலை பார்த்து வருகிறார் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த மாறன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை அடைந்தன. இந்த படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியாகின. தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையில் வெளிவந்த படம் கர்ணன் ஆகும். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சிற்றம்பலம் வெளிவர இருக்கிறது. வெளி வருவதற்கு முன்பே இவ்வாறு ட்ரோல்ஸ்களுக்கு உள்ளாகியுள்ளது திருச்சிற்றம்பலம் படம்.

எந்த டெலிவரி பாய் ராயல் என்பீல்ட்ல வராங்க? இதுல 3 காதலி வேற..! தனுஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. 7

விளம்பரம்

எந்த டெலிவரி பாய் ராயல் என்பீல்ட்ல வராங்க? இதுல 3 காதலி வேற..! தனுஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. 9

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment