சின்ன வாடகை வீடுதான்.! ஆனா நிறைய சந்தோசம்.! கொஞ்சும் தமிழில் தனது வீட்டை அழகாக சுற்றி காட்டிய சுனிதா.!

விஜய் டிவி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது. தனது ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பலரையும் சின்னத்திரைகளிலிருந்து வெள்ளி திரைக்கு அனுப்பி இருக்கிறது. அப்படி சென்றவர்கள் பலர் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம். இன்று காமெடி உலகின் உச்சத்தில் இருக்கிறார். அதே போல் அது இது எது என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன், மெரினா என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று டாப் ஹீரோக்கள் பட்டியலில் இருக்கிறார். நடிப்பது மட்டுமின்றி பாடுவது, பாடல் எழுதுவது, படங்கள் தயாரிப்பது என்று தன்னை பன்முகத்திறமையாளராக வளர்த்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன் அதற்கு உறுதுணையாக இருந்தது விஜய் டிவி. அப்படிப்பட்ட விஜய் டிவியின் ஒரு பிரபலம்தான் சுனிதா. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சின்ன வாடகை வீடுதான்.! ஆனா நிறைய சந்தோசம்.! கொஞ்சும் தமிழில் தனது வீட்டை அழகாக சுற்றி காட்டிய சுனிதா.! 1

விளம்பரம்

வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்து வளர்ந்த இவர் நடனத்தை சிறுவயதிலேயே பயின்றார். தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார். மொழி தெரியாமல் இருந்த போதிலும் இவர் நடன நிகழ்ச்சிகளில் பலவற்றில் பங்கேற்றுள்ளார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பாக ஆடி இருக்கிறார். ஆனால் இவரால் எந்த நிகழ்ச்சியிலும் வெற்றி பெற இயலவில்லை. இருந்தபோதிலும் மனம் தளராமல் இருந்த அவருக்கு பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 2வில் கோமாளியாக வந்த இவரை மக்கள் விரும்பி பார்க்கத் தொடங்கினர். மொழி தெரியாமல் தனது தவறான தமிழால் கொஞ்சி கொஞ்சி பேசுவதால், இவர் மக்களிடையே மிக பிரபலமாக மாறிப் போனார். மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கோமாளியாகவும் சுனிதா இருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை.

தொடர்புடையவை  பெயருக்கு சாரி கேட்ட நிக்சன்..! நிக்சனை வெளுத்து வாங்கிய வினுஷா..! ப்ரோமோ உள்ளே.!

சின்ன வாடகை வீடுதான்.! ஆனா நிறைய சந்தோசம்.! கொஞ்சும் தமிழில் தனது வீட்டை அழகாக சுற்றி காட்டிய சுனிதா.! 3

விளம்பரம்

ஒரு மேடையில் அவருக்கு விருது கொடுக்கும் பொழுது, நான் தமிழ் மக்களை என்றும் மறக்க மாட்டேன், அவர்கள் மனதில் இடம் பிடிப்பது மிகவும் கடினம், ஆனால் இன்று நான் இடம் பிடித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். சுனிதா பேசும் தவறான தமிழுக்கும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழுக்கும் மிகப்பெரிய ரசிகர்களே உண்டு. அவர் பாடல்களை தப்பு தப்பாக பாடுவார். அதைக் கேட்பதற்கு மிகவும் காமெடியாக இருக்கும். இந்த நிலையில் அசாமிலிருந்து சென்னையில் வசித்து வரும் சுனிதா, தான் வசிக்கும் வாடகை வீட்டின் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சிறிய வீடு தான் என்றாலும் மிக அழகாக அந்த வீட்டை பராமரித்து வருகிறார். பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும் அந்த ஹோம் டூர் வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sunita Express

விளம்பரம்

Leave a Comment