அதிதியை கொண்டாடி தீர்க்கும் ட்விட்டர் வாசிகள்..படம் வேற லெவெலில் இருப்பதாகவும் கருத்து

கார்த்தி அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படம் தமிழகம் எங்கும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அதிதி ஷங்கரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் கார்த்தி. ஏற்கனவே கொம்பன் படத்தை இவர் இயக்கி இருந்தார். இந்த நிலையில் கார்த்தியை வைத்து மீண்டும் ஒரு ஆக்‌ஷன் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதுவே அவருக்கு முதல் திரைப்படம். இந்த திரைப்படம் இன்று தான் வெளியாகிறது, ஆனால் அதற்குள்ளாகவே அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உள்ளார்.

அதிதியை கொண்டாடி தீர்க்கும் ட்விட்டர் வாசிகள்..படம் வேற லெவெலில் இருப்பதாகவும் கருத்து 1

விளம்பரம்

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், ஆர் கே சுரேஷ், சூரி, சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர், டீசர், பாடல்கள் என அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நேற்று மாலை இதன் சில காட்சிகளும் வெளியாகி இருந்தது. இது பருத்திவீரன் படத்தை பிரதிபலிப்பதாக இருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது. இந்த படத்தில் அப்பாவை எதிர்க்கும் நான்காவது மகனாக நடித்திருக்கிறார் கார்த்திக். இந்த நிலையில் இன்று காலை திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர் விருமன் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

தொடர்புடையவை  கதிருக்காக ஹோட்டலுக்கு வந்த மூர்த்தி.! கண்கலங்க வச்சிட்டீங்கப்பா..அண்ணன் தம்பிங்கன்னா இப்படி இருக்கணும்

அதிதியை கொண்டாடி தீர்க்கும் ட்விட்டர் வாசிகள்..படம் வேற லெவெலில் இருப்பதாகவும் கருத்து 3

விளம்பரம்

படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், இரண்டாவது பாதியில் நடனம் மிக சூப்பராக இருந்ததாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர் .படத்தின் கதையை முதல் பாகத்தில் தெளிவாக சொல்லிவிட்டு இரண்டாம் பாகத்தில் அடித்து ஆடி இருப்பதாகவும் கிராமத்து லுக்கில் கார்த்தியை அடித்துக் கொள்ள ஆளில்லை என்றும் கூறி வருகின்றனர்.

அதிதியை கொண்டாடி தீர்க்கும் ட்விட்டர் வாசிகள்..படம் வேற லெவெலில் இருப்பதாகவும் கருத்து 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment