உடல் உறுப்பு கிடைக்காம இனி ஒரு உயிர் கூட போக கூடாது.! மீனா செய்த நெகிழ்ச்சி செயல்

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரது கணவர் வித்தியாசாகர். பெங்களூருவை சேர்ந்த பொறியாளரான வித்யாசாகருக்கும், மீனாவுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் நைனிகா என்ற மகளும் உண்டு. நைனிகாவும் விஜயுடன் சேர்ந்து தெறி படத்தில் நடித்த அசத்தியிருந்தார். இந்த நிலையில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த மீனாவின் வாழ்க்கையில் புயல் வீசியது போல ஒரு சம்பவம் நடந்தது. அவரது கணவர வித்யாசாகர் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு அருகே புறாக்கள் அதிகமாக இருந்துள்ளது. அந்த புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்து வந்ததால் அவரின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் புத்தாண்டு தினத்தை ஒட்டி அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. அவருக்கு மட்டும் இன்றி மீனா, மகள் நைனிகா, வித்யாசாகரின் தாயார் ஆகியோருக்கும் கொரோனா ஏற்பட்டதாக மீனா சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.

தொடர்புடையவை  மணிரத்தினத்தை அசிங்கப்படுத்தி ராம் சரண் போட்ட ட்வீட்? சர்ச்சையை கிளப்பும் தெலுங்கு நடிகர்

உடல் உறுப்பு கிடைக்காம இனி ஒரு உயிர் கூட போக கூடாது.! மீனா செய்த நெகிழ்ச்சி செயல் 1

விளம்பரம்

நுரையீரல் பாதிப்புடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்து கொள்ளவே மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. ஏற்கனவே நுரையீரல் செயல் இழந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பால் நுரையீரல் மாற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் வித்யாசாகர். இதற்காக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியா முழுவதிலும் உறுப்புகள் தேடப்பட்டது. ஆனால் அவருக்கு ஏற்ற ரத்த வகை கிடைக்காததால் உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் அவரின் உடல்நிலை மேலும் மோசம் அடையவே, எக்மோ கருவியின் மூலமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக சிகிச்சை பலனின்றி மீனாவின் கணவர் உயிரிழந்தார்.

உடல் உறுப்பு கிடைக்காம இனி ஒரு உயிர் கூட போக கூடாது.! மீனா செய்த நெகிழ்ச்சி செயல் 3

விளம்பரம்

இந்த நிலையில் மீனா தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யுங்கள். வித்யாசாகருக்கு உடல் உறுப்பு கிடைத்திருந்தால், என் வாழ்க்கை எப்படியோ மாறியிருக்கும். என் கணவரும் பிழைத்திருப்பார். ஆனால் சரியான உறுப்பு கிடைக்காத காரணத்தினால் கணவரை இழந்துவிட்டேன், ஒரு உறுப்பு தானம் செய்பவரால் எட்டு உயிர்களை காப்பாற்ற முடியும், ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு உறுப்பு தானத்தை தவிர சிறந்த செயல் வேறு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். உறுப்பு தானம் என்பது உறுப்பை வழங்குபவருக்கும் நோயாளிக்கும், மருத்துவருக்கும் இடையே உள்ள உறவு மட்டுமல்ல. அது நண்பர்கள் குடும்பத்தினர்கள், தன்னுடன் வேலை பார்க்கும் அனைவருக்குமானது என்று கூறியிருக்கிறார். தன் கணவர் உறுப்பு கிடைக்காமல் இறந்த காரணத்தினால் தன்னுடைய உறுப்புகளை தானம் செய்துள்ளதாக அவர் தனது பதிவில் கூறியிருக்கிறார். தனது கணவர் போல் ஒரு உயிர் கூட உடல் உறுப்பு கிடைக்காமல் இறந்து விடக்கூடாது என்று மீனா செய்துள்ள காரியம் பலரையும் நெகழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தொடர்புடையவை  காதலிக்க கைடு இல்ல சொல்லி தர வா வாத்தி..! "வா வாத்தி" பாடலின் முழு வீடியோ சாங் வெளியானது.!

உடல் உறுப்பு கிடைக்காம இனி ஒரு உயிர் கூட போக கூடாது.! மீனா செய்த நெகிழ்ச்சி செயல் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment