நயனின் தேசபற்று..! ஸ்பெயினில் நமது தேசிய கொடியை உயர்த்தி பிடித்த விக்கி நயன் தம்பதிகள்.!

வெள்ளித்திரையில் இருக்கும் மிக க்யூட்டான ஜோடிகள் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா ஆரம்பத்தில் சிறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை சுமார் 75 படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் படத்தின் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் மாதம் முன்பு திருமணம் செய்து கொண்டனர். புகைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில் திருமண வீடியோக்களை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் கூட சமீபத்தில் வெளிவந்தது.

தொடர்புடையவை  என்ன சொல்லிட்டு இவரு உருவக்கேலி பண்ணுவாராம்.. சிம்புவை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

நயனின் தேசபற்று..! ஸ்பெயினில் நமது தேசிய கொடியை உயர்த்தி பிடித்த விக்கி நயன் தம்பதிகள்.! 1

விளம்பரம்

திருமணம் முடிந்து இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமுனுக்காக சென்றிருந்தனர். அங்கிருந்து திரும்பிய அவர்கள் தங்களது வேலைகளில் பிஸியாகினர். நயன்தாரா அட்லீ இயக்கத்தில் தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இயக்கினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா இரண்டையும் ஒருங்கிணைத்து மிக பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் விக்னேஷ் சிவன். இதனால் இருவரும் வேலை வேலை என்று பிஸியாக இருந்தால் தங்களுக்கென நேரம் ஒதுக்கவில்லை. தற்போது இருவரும் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவுக்கு சென்றுள்ளனர். விமானத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், ஸ்பெயின் உணவகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தெருக்களில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.

நயனின் தேசபற்று..! ஸ்பெயினில் நமது தேசிய கொடியை உயர்த்தி பிடித்த விக்கி நயன் தம்பதிகள்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தங்கள் முகப்பு பக்கங்களை மாற்றியும், வீடுகளில் தேசிய கொடி ஏற்றியும் வருகின்றனர். ரஜினி, விஜய் போன்றவர்கள் கூட தங்கள் வீடுகளில் கொடியேற்றியுள்ளனர். ஸ்பெயினுக்கு சென்ற போதிலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது கைகளில் தேசிய கொடியை தாங்கிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். மேலும் அதில்,இன்று சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்! உலகம் முழுவதும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்! இந்திய குடிமகனாக இருக்கும் நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான, ஜனநாயகம் மற்றும் மகிழ்ச்சியான வீடு நம் நாடு ! என்று பதிவிட்டுள்ளார்கள்.

தொடர்புடையவை  "அடேய்....என்னடா இதெல்லாம்"!! படம் போஸ்டர் என நிர்வாணமாக நிற்கும் விஜய் தேவரக்கொண்டா!!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment