தேங்யூ ஷங்கர் சார்.! நீங்க மட்டும் இல்லைனா..அப்பாவின் 59வது பிறந்தநாளுக்கு அதிதி உருக்கமான வாழ்த்து

இன்று இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகள் அதிதி சங்கர் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவர் குறைந்த படங்களை இயக்கியிருந்த போதிலும், அனைத்துமே பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் 500 கோடியை தாண்டும் இவரது பட்ஜெட். இவரின் படங்கள் மக்களை பெரிதும் கவர்வது உண்டு. ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி என அவர் ஒவ்வொரு படங்களிலும் தன்னுடைய பிரம்மாண்டத்தை காட்டியிருப்பார். அதற்காக அவர் செய்யும் தொழில்நுட்பங்களும், செட் அமைப்புகளும் பிரம்மாண்டமாக இருக்கும். அதில் அவர் கை சேர்ந்தவராக இருக்கிறார். அவரது முயற்சிகள் ஒவ்வொன்றையும் திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

தேங்யூ ஷங்கர் சார்.! நீங்க மட்டும் இல்லைனா..அப்பாவின் 59வது பிறந்தநாளுக்கு அதிதி உருக்கமான வாழ்த்து 1

விளம்பரம்

சிவாஜி படம் குவித்த வசூலையும், எந்திரனில் ரோபாவாக மாற்றி ரஜினியை வைத்து இவர் எடுத்த படமும் இன்றும் அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாகவே ஆகவே இருக்கிறது. இவர் தற்போது ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தையும், கமலை வைத்து இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார். அவருக்கு இன்று 59வது பிறந்தநாள். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில், அவரது மகள் அதிதி ஷங்கரும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். ஷங்கரின் இளைய மகள் தான் அதிதி. இவர் மருத்துவம் படித்திருந்த போதிலும், சினிமா துறையில் இருந்த ஆர்வத்தினால் அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் தான் தனது திறமையால்தான் வந்துள்ளேன், ரசிகர்கள் ரசித்தால் தான் அடுத்த படங்களில் நடிக்க முடியும் என்று அதிதி விளக்கம் அளித்து இருந்தார்.

தொடர்புடையவை  ஹாலிவுட் படம் பாத்த மாதிரி இருக்கு.. படத்தை பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட ரசிகர்கள் | Valimai

தேங்யூ ஷங்கர் சார்.! நீங்க மட்டும் இல்லைனா..அப்பாவின் 59வது பிறந்தநாளுக்கு அதிதி உருக்கமான வாழ்த்து 3

விளம்பரம்

 

இன்று அவர் தனது தந்தையின் 59 வது பிறந்த நாளுக்காக உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். என் வாழ்க்கையில் சினிமாவை கொண்டு வந்த மனிதருக்கு பிறந்தாள். பான் இந்தியா படங்களின் முன்னோடி இவர்தான், ஒரு கற்பனையை திரையில் உயிர்ப்பிக்க வைப்பது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்னை ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்கள் செயலால் ஈர்த்துக் கொண்டே இருக்கிறீர்கள், என்னுடன் இருப்பதற்கு நன்றி சங்கர் சார்.. எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய அப்பா.. ஐ லவ் யூ சின்னு என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். Twitter Original Source From: Aditi Shankar

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment