கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரியங்காவிற்காக விஜய் டிவி ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை செய்துள்ளது. அந்த சர்ப்ரைஸ் பார்த்த பிரியங்கா கண்கலங்கி அழுதார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரியாலிட்டி ஷோக்களில் முன்னிலை வகிக்கும் விஜய் டிவியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளர் பணிக்காக சேர்ந்தவர் பிரியங்கா. அன்று தொடங்கி இன்று வரை அவர் தொடர்ந்து அந்த தொலைக்காட்சியிலேயே இருந்து வருகிறார். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் நடத்திய ஸ்டார்ட் மியூசிக் என்ற ஷோ மக்கள் பலரால் விரும்பி பார்க்கப்பட்டது. இவர் செய்யும் குறும்புகள், காமெடி பேச்சுக்கள், சேட்டைகள் அனைத்தும் சிரிப்பை வரவழைக்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் சிரிக்கும் போது பலருக்கும் சிரிப்பு வரும் அளவிற்கு குலுங்கி குலுங்கி சிரிப்பார். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்தார். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கான இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 5ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் இறுதி வரை கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் இவர் செய்யும் குறும்பு வீடியோக்கள், vlogs போன்ற பலவற்றை பதிவேற்றி வருகிறார். இவர் பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியை பிக்பாஸ் வின்னர் ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதிலும், முகம் சுளிக்காத வண்ணமும் இவர் செய்யும் குறும்புகளால் இவர் பலரின் ஃபேவரைட் ஆக மாறி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டவர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது விஜய் டிவி. அதையும் இவரே தொகுத்து வழங்கி வருகிறார். இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிரியங்கா விஜய் டிவியில் இணைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவருக்கு கேக் வெட்டியும் அவரது நண்பர்களை அழைத்தும், அவருக்கு பரிசுகளை அளித்தும் சர்ப்ரைஸ் செய்துள்ளது விஜய் டிவி. இதை பார்த்த பிரியங்கா கண்கலங்கி அழுதார். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Vijay Television