படம் ரொம்ப நல்லா இருக்கு! நித்யா மேனனுக்காகவே படத்தை பார்க்கலாம்.! ப்ளூ சட்டை பாராட்டு

நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம்தான் திருச்சிற்றம்பலம். இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படத்தின் பாடல்கள், ட்ரைலர், என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருந்தது. நேற்று காலை 8 மணி முதல் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே கருத்து கூறினர். குறிப்பாக தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனன் கதாபாத்திரம் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்ததாக பலரும் கருத்து கூறினர். அந்த வகையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் திருச்சிற்றம்பலம் படம் குறித்து தனது விமர்சனத்தை வைத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் ரொம்ப நல்லா இருக்கு! நித்யா மேனனுக்காகவே படத்தை பார்க்கலாம்.! ப்ளூ சட்டை பாராட்டு 1

விளம்பரம்

படத்தின் கதை இது மாதிரி தான் இருக்கும் என்பதை படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கண்டுபிடிக்க முடிந்தது, இந்த மாதிரி படம் நிறைய படங்களை தனுஷே நடித்து இருக்கிறார். அவர் நடித்த விஐபி, யாரடி நீ மோகினி போன்ற படங்கள் இதே போன்ற கதையம்சத்துடன் இருந்ததாக ப்ளூ சட்டை கூறினார். படத்தின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று நாம் படம் முடிவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடித்து இருந்தால் கூட, நம்மை படம் முடியும் வரை உட்கார வைத்திருந்த காரணமே இந்த படத்தின் வெற்றி என்றும் ப்ளூ சட்டை கூறினார். மேலும் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனன் தான் என்றும், அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம், அவருடைய நடிப்பு மிகப் பிரமாதமாக இருந்ததாக ப்ளூ சட்டை மாறன் கூறினார். மேலும் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வராமல் குறிப்பிட்ட அளவு கதாபாத்திரங்களை வைத்து அவர்களை நேர்த்தியாக கொண்டு செலுத்தி இருந்ததாகவும் ப்ளூ சட்டை கூறினார்.

தொடர்புடையவை  தந்தைக்காக மிருமாக மாறிய மகன்.! ரன்பீர் கபூரின் 'அனிமல்' தமிழ் ட்ரைலர் வெளியானது.!

படம் ரொம்ப நல்லா இருக்கு! நித்யா மேனனுக்காகவே படத்தை பார்க்கலாம்.! ப்ளூ சட்டை பாராட்டு 3

விளம்பரம்

 

 

விளம்பரம்

படத்தின் கேமராமேன் ஓம் பிரகாஷின் வேலை மிக சிறப்பாக இருந்தது, குறிப்பாக மேகம் கருக்குதா பாடல் மிகப் பிரமாதமாக இருந்ததாகவும், அனிருத் இசை வழக்கம் போல நன்றாக இருந்ததாகவும் ப்ளூ சட்டை கூறினார். படத்தின் குறைகளாக சிலவற்றையும் அவர் பட்டியலிட்டார். அதில் தந்தைக்கும் தனுசுக்கும் இருக்கும் சண்டைக்கு பிளாஷ்பேக்கில் சில காரணங்களை கூறியிருக்கிறார்கள், ஆனால் அது வலுவான காரணங்களாக இல்லை, மேலும் தனது தாத்தாவுடன் அமர்ந்து தனுஷ் சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளும் ஏற்புடையதாக இல்லை, மேலும் தந்தை மற்றும் தாத்தாவை அவன் இவன் என்று பேசுவதும் ஏற்புடையதாக இல்லை என்றும் ப்ளூ சட்டை கூறினார். மொத்தத்தில் இந்த கதை ஏற்கனவே பார்த்து பழகி புளிச்சு போன கதை தான் என்றாலும், ஆனால் இப்பொழுதெல்லாம் ஆக்ஷன் படம் எடுக்கிறேன், ரவுடி கதை எடுக்கிறேன், ஆளைக் கடத்துகிறேன், போதைப்பொருள் கடத்துகிறேன் என்று சொல்லி படம் முழுக்க துப்பாக்கி, அருவாள் எடுத்துக் கொண்டு சுட்டுக் கொண்டு, ரத்தம் ஒழுக விட்டுக் கொண்டிருக்கின்ற கதையாக தான் இருக்கிறது.

தொடர்புடையவை  பாலியல் புகாரில் சிக்கிய நிவின் பாலி..! வந்த இறுதி தீர்ப்பு..! என்னாச்சு தெரியுமா..?

படம் ரொம்ப நல்லா இருக்கு! நித்யா மேனனுக்காகவே படத்தை பார்க்கலாம்.! ப்ளூ சட்டை பாராட்டு 5

விளம்பரம்

அந்த படங்களுக்கு மத்தியில், ஹீரோவுக்கு நான்கு நண்பர்கள் கிடையாது, லூசுத்தனம் செய்யும் ஹீரோயின் கிடையாது, ஒரே ஒரு தோழிதான், அதுவும் நித்யா மேனன் மட்டும் தான், அந்த நித்யா மேனன் கதாபாத்திரத்தை மிகவும் ரசிப்பீர்கள், இந்த படத்தை குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம் என்றும் ப்ளூ சட்டை தனது விமர்சனங்களை கூறினார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

YouTube Video code embed credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment