கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டாலே குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் எல்லாமே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போலவும், ராதை போலவும், பலராம் போலவும் அலங்காரம் செய்து கடைகளுக்குச் சென்று போட்டோ எடுத்து வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது. ஆண் குழந்தையாக இருந்தால் கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தையாக இருந்தால் ராதை போலவும் வேடமிட்டு அவர்கள் வாயில் வெண்ணைகளை தடவி விதவிதமாக போட்டோ எடுத்து மகிழ்வது தற்கால பெற்றோர்களின் வழக்கமாகிவிட்டது. முகநூல், வாட்சப் ஸ்டேட்டஸ் போன்ற எதைத் திறந்தாலும் எங்கள் வீட்டு குட்டி கிருஷ்ணா என்று அவர்கள் பதிவிட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. ஒரு மாத குழந்தை தொடங்கி 10 வயது குழந்தை வரை தங்கள் குழந்தைகளை அலங்காரம் செய்து அழகு பார்க்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் பிறந்த தினமான அஷ்டமி தினத்தில், கிருஷ்ணரை வழிபாடு செய்ய கிருஷ்ணரின் கால் போலவே வீடுகளில் அரிசி மாவில் மாக்கோலம் வரைந்து கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணை, சீடை, அவல் போன்ற பிரசாதங்களை படைத்து கிருஷ்ணரை வழிபடுவது வழக்கம். குறிப்பாக சிறு குழந்தைகள், கைக்குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சிறுவர்களின் கால்களை அரிசி மாவில் நனைத்து அந்த கால்களை வைத்து அச்சு எடுத்து தரை முழுவதும் வரைந்திருப்பார்கள். இது பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். அதுபோல விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போல அலங்கரித்து வீடியோக்களை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோக்கள் அனைத்துமே பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. காஜல் அகர்வால், ஸ்ரேயா கோஷல் போன்ற முன்னணி நடிகைகள் பாடகிகள் கூட தங்களது குழந்தைகளை கிருஷ்ணர் போல் அலங்கரித்துள்ளனர்.

தமிழில் ஒளிபரப்பாகும் விஜய் டிவியின் நட்சத்திரங்களில் மைனா நந்தினி தனது மகன் துருவிற்கும் தனது கணவர் யோகிக்கும் கிருஷ்ணர் போல் வேடமிட்டு இருக்கிறார். தனது தந்தையின் வாயில் வெண்ணெய் எடுத்து அப்பி விளையாடுகிறார் துருவ். அதை பார்ப்பதற்கே காமெடியாக இருக்கிறது. மேலும் நமீதா தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் நேற்று கிருஷ்ணர் கோவிலில் தரிசனம் செய்திருந்தார். அவர்கள் மட்டுமில்லாமல் நடிகை ரம்பா, ஆர்.கே.சுரேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, தமிழும் சரஸ்வதியும் கார்த்திக், குக் வித் கோமாளி ஸ்ருதிகா, நடிகை பிரணிதா, சாண்டி மாஸ்டர், சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி, காமெடி நடிகர் சதீஷ் போன்ற பலரும் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போல வேடமணிந்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். மிக அழகாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Little Talks