தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தற்போது சூப்பர் ஸ்டாருடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து மொமென்ட்ஸ் வித் சூப்பர் ஸ்டார் என்று பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பெயரிலாகி வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளராக இருந்த சரவணன் அருள் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். ஆரம்பத்தில் தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்த அவர், படங்களின் நடிக்கும் ஆசையினால், சரவணா ஸ்டோர்ஸ் ப்ரொடக்ஷன் என்ற ஒரே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் தனது கடை விளம்பரங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி ஜெரி என்ற இருவரை வைத்து தி லெஜெண்ட் படத்தை எடுத்தார். இரண்டு வாரங்களாக எந்த போட்டியும் இல்லாததால், படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

தமிழில் இருக்கும் கதாநாயகிகள் யாரும் நடிக்க முன் வராததால் 20 கோடி செலவு செய்து ஹிந்தி அழகியான ஊர்வசி ரவுத்தேலாவை படத்தில் கொண்டு வந்தார் அண்ணாச்சி. அவரும் அண்ணாச்சியுடன் இணைந்து நடித்து அசத்தியிருக்கிறார். படம் வெளியான பின்பு பல ப்ரோமோஷன் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் அண்ணாச்சி. விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறேன் என்று சமீபத்தில் ட்விட்டரில் அறிவித்திருந்தார். அனேகமாக வெற்றி விழா குறித்த அறிவிப்பாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ட்விட்டரில் புதிதாக இணைந்திருக்கிறார் அண்ணாச்சி. இணைந்த வேகத்திலேயே தன்னுடைய படத்தை ஆறிலிருந்து அறுபது வரை அனைவரும் ரசித்ததாக அவர் ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அண்ணாச்சியின் இந்த வெற்றியினால் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. நல்ல கதையம்சத்துடன் கூடிய கதைகளை கேட்டு வருவதாகவும், நல்ல இயக்குனர்களை கொண்டு அடுத்த மிகப் பிரம்மாண்ட படத்தில் நடிக்க இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக மாறியுள்ள அண்ணாச்சி, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பகிர்ந்து மொமென்ட் வித் சூப்பர் ஸ்டார் என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குளை குவித்து வருகின்றது.
