சின்னத்திரை ஹாசினி சிவாங்கியை சந்திக்க கூடிய கூட்டம், ஸ்தம்பித்த தேனி

விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இரண்டு சீசன்கள் கடந்து 3வது சீசன்னாக இன்றும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். நடிகர் அஸ்வின், பாலா, புகழ் போன்றவர்கள் இதற்கு முன் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் அறிமுகம் பெற்றாலும் இந்த நிகழ்ச்சி மூலமே மிகவும் பிரபலமானார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் முன்னர் சூப்பர் சிங்கரில் பாடகராக இருந்த போது கூட இல்லாத அளவிற்கு புகழை சேர்த்து இப்பொது மிகவும் மக்களை ரசிக்கவைக்கும் நபராக இருப்பவர் சிவாங்கி. ஆண் கோமாளிகள் மத்தியில் பெரிய காமெடி முன்னனுபவம் இல்லாமல் இதில் கலந்து கொண்டு மிகவும் காமெடியில் அசத்தி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சின்னத்திரை ஹாசினி சிவாங்கியை சந்திக்க கூடிய கூட்டம், ஸ்தம்பித்த தேனி 1

விளம்பரம்

இதன் மூலம் வெள்ளித்திரையில் சில பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. ஏற்கனவே இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தில் காமெடி வேடத்தில் தோன்றி நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். பாடல்கள் படுவதையும் கைவிடாத இவர், Podcast நடத்தி அதில் பாடி வருகிறார். மேலும் தற்போது ஆல்பம் பாடல் வெளியிடவும் தயாராகி வருவதாக ஒரு இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் நேரத்தில் தெரிவித்து இருந்தார். அவ்வப்போது போட்ஷூட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவர், சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெறவும் இதன் மூலம் பெற முயற்சித்து வருகிறார்.

தொடர்புடையவை  மகனின் முகத்தை முதல்முறையாக காண்பித்த நடிகை Amalapaul...! வைரலாகும் புகைப்படங்கள்..!

சின்னத்திரை ஹாசினி சிவாங்கியை சந்திக்க கூடிய கூட்டம், ஸ்தம்பித்த தேனி 3

விளம்பரம்

இந்த நிலையில் நேற்று அவர் தேனிக்கு கடை திறப்பு விழாவு ஒன்றுக்கு சென்று இருந்தார். அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கத்தினர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். முன்னணி நடிகைகள் கடை திறப்பு விழாவிற்கு வரும் போது எப்படி கூட்டம் கூடுமோ அதே போல கூட்டம் கூடியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிவாங்கி பெரிய ஆள் ஆகிடாங்க போலயே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. கீழே உள்ள வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits : Cook Karthick official

விளம்பரம்

Leave a Comment