எப்பொழுதும் பிக்பாஸ் ஆரம்பிக்கிறது என்றாலே யார் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள்? என்ற ஆவல் மக்களிடையே தொற்றிக் கொள்ளும். அதற்கேற்ப இணையங்களில் வதந்திகள் றெக்கை கட்டி பறக்கும். தற்போது பிக்பாஸ் சீசன் 6 குறித்து தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக நடந்து முடித்துள்ளது.

அதில் இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறையே இல்லை என்றே கூறலாம். அந்தளவிற்கு சுவாரசியமும், சண்டைகளும் அதிகமாகவே இருந்தது. பொதுவாகவே பிக்பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆட்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக உள்ளது. குக் வித் கோமாளி அஸ்வின், ரக்ஷன், தர்ஷா, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, டிடி, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் என பலரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் யாரு வேண்டுமானாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்க விரும்பும் நபர்கள் www.vijay.startv.com என்ற வலைதள பக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் புகைப்படம் மற்றும் ஒரு வீடியோவை பதிவேற்ற வேண்டும். இதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below Video…
Youtube Video Code Embed Credits: Vijay Television