நயன்தாரா நடுரோட்டில் அமர்ந்து கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. காதலித்த சமயங்களில் தான் புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களை ஏங்க வைத்தார்கள் என்றால், தற்போது திருமணம் ஆன பிறகும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஏங்க வைத்து வருகின்றனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிகள். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. அப்போதே அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இந்த விஷயத்தை மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்த இவர்கள், பின்னாளில் வெளிப்படையாக அறிவித்தனர். பின்னர் ஊர் ஊராக சுற்றுவது, அவுட்டிங் செல்வது, டேட்டிங் செல்வது என்று இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து கடந்த ஜூன் மாதம் திருமணமும் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், தினமும் தனது காதல் மனைவியை ரசித்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாவோன்சியா நகரில் தற்கால கட்டிடங்கள் முன்பாக அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார்.

அதோடு நீ என் உலக அழகி, உன்னை போல் ஒருத்தி இல்லையே, என் உலக அழகியும் இவ்வுலகத்தின் அழகும், இந்தியாவிலிருந்து வந்துள்ள அழகான பெண் நயன்தாரா, இதுவரை சென்ற இடங்களில் மிகச்சிறந்த இடம் என்று அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. தற்போது அவர் நயன்தாராவின் வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார். அதில் ரோட்டில் எதோ காமெடி நிகழ்ச்சி போன்று நடந்து கொண்டிருக்கிறது. அதை அமர்ந்து பார்த்து கொண்டிருக்கும் நயன்தாரா விழுந்து விழுந்து சிரிக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..