பகை முடிக்க வருகிறான் பகாசூரன்.! செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் டீசர் வெளியானது.

இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள புதிய படமான பகாசூரன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் சர்ச்சைக்குரிய இயக்குனராகவே இருந்து வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட சாதியை எதிர்க்கும் விதமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக நாடக காதல் பற்றி இவர் எடுத்த படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இயக்குனர் மோகன் ஜி படம் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறார். நெகட்டிவ் விமர்சனங்களால் இவரது படங்களும் வசூலை வாரி குவித்து வருகின்றது. அந்த வகையில் அவர் தற்போது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் அதற்கு பகாசூரன் என்று பெயர் வைத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பகை முடிக்க வருகிறான் பகாசூரன்.! செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் டீசர் வெளியானது. 1

விளம்பரம்

 

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக தனுஷின் சகோதரர் செல்வராகவன் மற்றும் நட்டி நடராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஷாம் சி எஸ் இசையமைக்கும் இந்த படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் பகை முடிக்க வருகிறான் பகாசூரன் என்று பதிவிட்டு இருந்தார். படத்தின் டீசர் இன்று காலை வெளியாகும் அறிவித்திருந்தார். இந்த முதல் பார்வையில் செல்வராகவன் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும், உடல் முழுதும் பட்டையுடன் உக்கிரமாக இருக்கும் ஆன்மீகவாதி போல் காணப்பட்டார்.

விளம்பரம்
தொடர்புடையவை  Vijay இனி ரசிகர்களை தேடி வருவார்..! Legend Saravanan அதிரடி பேட்டி..!

பகை முடிக்க வருகிறான் பகாசூரன்.! செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் டீசர் வெளியானது. 3

இதைப் பார்த்த பலரும் இந்த கெட்டப்பை பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் கார்த்திக் கெட்ட போல் இருப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது நீங்களும் அந்த டீசரை காண.. Watch the teaser below..

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: MRT Music

விளம்பரம்

Leave a Comment