சார்பட்டா படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் தான் நட்சத்திரங்கள் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து துஷாரா விஜயன், கலையரசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நேற்று தமிழகமெங்கும் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தன. இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து யாழி பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. எப்பொழுதும் பா ரஞ்சித் படங்கள் என்றாலே சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார், ஆனால் இந்த முறை அவருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக இந்த படத்திற்கு தென்மா இசையமைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியான போதே இது தன் பால் வேட்பாளர்களின் காதல் குறித்த படமாக இருக்க கூடும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் படம் வெளியான போதும் இது அந்த கருத்தையே மையப்படுத்தி கூறியது. ஆணும் ஆணும் காதலிக்கலாம், பெண்ணும் பெண்ணும் காதலிக்கலாம், காதல் என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்ளோ மதத்திற்குள்ளோ அடங்காது, காதலுக்கு எல்லையே கிடையாது, சாதி, மதம் கிடையாது என்பது போன்ற கருத்துக்களை ஆணித்தரமாக கூறியிருக்கும் படம் தான் நட்சத்திரங்கள் நகர்கிறது. தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் தனது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்.
கேரளாவில் எடுக்கப்படும் படங்களில் என்ன சாதி? என்ன மதம்? என்று வெளிப்படையாக கூறி படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அவ்வாறு கூறப்படுவதில்லை. மேல் சாதி, கீழ் சாதி என்று மட்டுமே கூறி வருகின்றனர். அவரின் முழு விமர்சனங்களை நீங்களும் காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Tamil Talkies