மீண்டும் பாக்கியவை அசிங்கப்படுத்தும் கோபி..! சுயமரியாதையோடு வாழ முடிவெடுத்த பாக்கியா

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் பல திருப்பங்களுடன், டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தில் இருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. ஒரு குடும்பத் தலைவி தனது கணவனின் கள்ளக்காதலை கண்டுபிடித்து, அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பின்பு எவ்வாறு கஷ்டப்படுகிறார் என்பதை படம் பிடித்து காட்டும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. இதனால் இந்த தொடருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோவில், பாக்கியலட்சுமி கணவர் இல்லாமல் வாழ முடியும், தனி ஒரு பெண்ணாக இருந்து சாதிக்க முடியும் என்று காட்ட நினைக்கிறார். கோபி வெளியேறிய பின்பு அவரது மாமியார், செழியன், இனியா என்று யாருமே பாக்கியவிடம் பேசுவதில்லை. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மீண்டும் பாக்கியவை அசிங்கப்படுத்தும் கோபி..! சுயமரியாதையோடு வாழ முடிவெடுத்த பாக்கியா 1

விளம்பரம்

தற்போது இனியா தனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்றே கேட்கிறார். தனது தந்தை இருந்திருந்தால் இந்நேரம் ஃபீஸ் கட்டியிருப்பார் என்றும், இன்று தான் கடைசி நாள் என்றும் தன் தாயிடம் கூறுகிறார். மேலும் வீட்டின் கரண்ட் பில் 17,000 ரூபாவை நெருங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு தேவைக்கும் பணம் இல்லாமல் திணறி வருகிறார் பாக்யா. இந்த நேரத்தில் கோபி போன் செய்து பில்லை எனக்கு அனுப்பு நான் வீட்டின் செலவுகளை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் பாக்கியா அவர் கூறியதை அவமானமாக பார்க்கிறார். சுயமரியாதையாக வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் முடிவெடுக்கும் பாக்யா, ஏதாவது செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார். செய்தித்தாளில் சமையல் போட்டி ஒன்றுக்கு வரும் விளம்பரத்தை பார்க்கிறார்.

தொடர்புடையவை  மாங்குயிலே பாட்டுக்கு ஆண்டி கரகாட்டம் ஆட.. ஜிபி முத்து வாசிக்க.! ஆஹா என்ன ரகளை பண்ணுறாங்க.!

மீண்டும் பாக்கியவை அசிங்கப்படுத்தும் கோபி..! சுயமரியாதையோடு வாழ முடிவெடுத்த பாக்கியா 3

விளம்பரம்

அந்த ஆர்டரை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு 15 நிமிடத்தில் ஒரு டிஷ் செய்து அசத்தும் போட்டியாளருக்கு தான் அந்த ஆர்டர் தரப்படும் என்று அந்த நிறுவனம் அறிவிக்கிறது. பாக்யாவும் அந்த போட்டியில் கலந்துகொண்டு ஒரு டிஷ் செய்கிறார். அவர் அந்த போட்டியில் வெற்றி பெற்று அந்த சமையல் ஆர்டரை பெறுவாரா? வீட்டின் பணச்சுமையை கட்டுப்படுத்துவாரா? இதெல்லாம் வரும் வாரங்களில் தெரியவரும். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video…

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment