விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பல திருப்பங்களுடன் நடந்து வருகிறது. தற்போது இந்த சீரியலில் ஹீரோவின் தம்பியான ஆதி ஜெசி என்கிற பெண்ணை காதலித்து ஏமாற்றி விடுகிறார். ஜெசி கர்ப்பமாக இருக்கிறார். அர்ச்சனாவின் வளைகாப்பிற்கு ஆதி வீட்டுக்கு வரும் ஜெஸ்ஸிக்கு மயக்கம் ஏற்படுகிறது. பின்னர் ஜெசி கர்ப்பமாக இருப்பதை ஆதியின் பாட்டி கண்டுபிடித்து விடுகிறார். மேலும் தனது கர்ப்பத்திற்கு காரணம் ஆதி தான் என்பதை ஆதியின் தாயார் சிவகாமியிடம் கூற அவர்கள் யாருமே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜெசி சந்தியாவின் உதவியை நாடிகிறார். ஆதிக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில் வைத்து உண்மையை வெளிக்கொண்டு வர செய்திருக்கிறார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டனர்.

ஆனால் சரவணனின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது, மேலும் அந்தப் பெண் மதம் மாறிவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று ஆதியுடன் கூறுகின்றனர். பாட்டியின் சம்மதம் வாங்காவிட்டால் நீ போலீஸ் ஆகும் கனவை விட்டு விடு என்று சந்தியாவிடமும் கண்டிஷன் போடுகிறார் சரவணனின் தாய் சிவகாமி. ஆதி ஜெசி வீட்டிற்கு சென்று ஜெசியை மதம் மாறச் சொல்லி கூறுகிறார். இதனால் ஜெஸ்ஸியின் பெற்றோர்களும் கடுமையான கோபம் ஏற்படுகிறது. இதை வலியுறுத்தி பேச வந்த சரவணன் மற்றும் சந்தியாவை ஜெஸ்ஸியின் பெற்றோர்கள் திட்டி அனுப்பி விடுகின்றனர். இதனால் ஆதி ஜெசியிடம் தனியாக சென்று நாம் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூற, ஆதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார் ஜெசி. மேலும் உன் தாயை சமாதானப்படுத்தும் வேலையை பார் என்று கூறி அனுப்பி விடுகிறார்.

இந்த நிலையில் ஜெஸ்ஸியின் பெற்றோர்கள் ஜெஸ்ஸியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். மருத்துவமனைக்கு சென்றதும் அருகில் இருக்கும் பெண்ணிடம் கருக்கலைக்க வந்திருப்பதாக கூற அதிர்ச்சி அடைகிறார் ஜெசி. மேலும் சரவணன் சந்தியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வருமாறு அழைக்கிறார். மேலும் தான் இந்த குழந்தையை கலைக்க மாட்டேன் என்று கோபத்தில் கத்துகிறார் ஜெசி. ஆனால் உண்மையில் ஜெஸ்ஸியின் தாயாருக்கு இதுபோல் திருமணமான புதிதில் கருக்கலைப்பு அடிக்கடி ஏற்பட்டதால் தன் மகளுக்கும் அது போல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக கூறுகின்றனர்.

கடவுள் கொடுத்த குழந்தையை நாங்கள் எப்படி கலைப்போம் என்றும் பேசுகின்றனர். இதனால் நெகிழ்ந்து போகின்றனர் சரவணனும் சந்தியாவும், இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.. நாளைய எபிசோடில் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் ஓடிவந்து ஐயாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று அழுது கொண்டே கூறுகிறான் அத்துடன் இந்த நாடகம் நிறைவடைகிறது.
