பிக்பாஸ் 6ல் போட்டியாளர் ஆகிறாரா அர்ச்சனா? விலகலுக்கு இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல்

பிக்பாஸ் சீசன் 6 ஜுரம் தற்போதே ஆரம்பித்துவிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது பிக்பாஸ். தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை முடித்துள்ளது. தற்போது ஆறாவது சீசன் எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். எப்பொழுதும் பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பாக அதில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்தான ஆர்வம் மக்களிடையே தொற்றிக் கொள்வது வழக்கம்தான். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6ன் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கிறது. முதல் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கியது போலவே ஆறாவது சீசனையும் உலகநாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளது உறுதியாகி இருக்கிறது.

பிக்பாஸ் 6ல் போட்டியாளர் ஆகிறாரா அர்ச்சனா? விலகலுக்கு இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல் 1

விளம்பரம்

இந்த நிலையில் சீசன் 6ல் யார் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்கின்ற ஆர்வம் மக்களிடையே அதிகம் ஆகி இருக்கிறது. எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்களின் பெயர் அவ்வபோது யூகமாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி ரக்ஷன், பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ராஜலட்சுமி, சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி போன்றோர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அடுத்த தகவலாக ராஜா ராணி 2 வில் இருந்து சமீபத்தில் விலகிய விஜே அர்ச்சனாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  அர்ச்சனாவிடம் மோசமான உடல் மொழி காட்டிய நிக்ஸன்.! வெளுத்து வாங்கிய ஹவுஸ்மேட்ஸ்.!

பிக்பாஸ் 6ல் போட்டியாளர் ஆகிறாரா அர்ச்சனா? விலகலுக்கு இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல் 3

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு இவர் விலகி இருப்பதும், சமீபத்தில் இவருடன் நடித்த பாலாஜி என்பவரின் திருமணத்திற்கு கூட இவர் கலந்து கொள்ளாமல் இருப்பதும் இந்த யூகங்களை கிளப்பி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலகட்டம் என்பதால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்பே போட்டியாளர்கள் வீட்டிற்குள்ளே அனுப்பப்படுவார்கள். எனவே 14 நாட்கள் என்றால் அடுத்த வாரத்திற்குள் ஓரளவிற்கு யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற விபரம் தெரிய வந்துவிடும். சில நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 6ல் போட்டியாளர் ஆகிறாரா அர்ச்சனா? விலகலுக்கு இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment