நடிகர் சூர்யா நடிக்கும் 42வது படத்தின் முதல் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் பட பூஜைகள் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. சூரரைப் போற்று, ஜெய் பீம், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து அவர் அடுத்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்ற தகவல் பரவியது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை சிவா உடன் பட பூஜையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. நேற்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து தீஷா பதானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கே.ஈ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து இருக்கின்றன. வணங்கான் மற்றும் வாடிவாசல் படங்கள் முதற்கட்ட சூட்டிங் முடித்த பிறகு இரண்டாவது கட்ட சூட்டிங்கை இன்னும் தொடங்காத நிலையில், தற்போது அடுத்த படமான சூர்யா 42வில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் சூர்யா.

சில மாதங்களில் வணங்கான் மற்றும் வாடிவாசல் இரண்டாம் கட்ட சூட்டிங் துவங்க இருப்பதால் அதற்கு முன்னதாக சூர்யா 42 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சிறுத்தை சிவா உடன் இணைந்து 42 ஆவது படத்தை முடித்த பின்பு அடுத்ததாக மீண்டும் சுதா கொங்காரா உடன் சூர்யா இணைய உள்ளதாக தெரிகிறது. சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்காரா தற்போது இயக்கி வருகிறார். இந்த படபிடிப்புகள் முடிந்த பின்பு மீண்டும் அவர் சூர்யாவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா 42 மோஷன் போஸ்டரை பார்க்கும்போது ஏதோ போர் காட்சிகள் நடப்பது போல் காட்டப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தைப் போல இதுவும் ஒரு அரசர்களின் வரலாற்று படமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போஸ்டரை நீங்களும் காண.. Watch the below video…
YouTube Video Code Embed Credits: Studio Green