மிருதன், டிக் டிக் டிக், டெடி போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கியவர் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன். அவரது இயக்கத்தில் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகியிருந்த படம் தான் கேப்டன். ஃபேண்டஸி ஜானரில் உருவாகி இருந்த டெடி படம் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக ஆர்யாவுடன் கைகோர்த்து இருந்தார் சக்தி சௌந்தரராஜன். கேப்டன் என்ற இந்த படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. ஏலியன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் ஒரு காட்டிற்கு செல்லும் ராணுவ குழு தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருகிறது. இந்த மர்மத்தை கண்டுபிடிக்க அந்த பகுதிக்கு செல்லும் ஆர்யா தலைமையிலான ராணுவக் குழுவிற்கு ஒரு ஏலியன் கும்பல் சவாலாக இருக்கிறது. அந்த ஏலியன் கும்பலிடம் இருந்து எப்படி தனது குழுவை காப்பாற்றுகிறார் என்பது குறித்த கதை தான் கேப்டன். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படத்தைப் பார்த்து விட்டு வந்த பலரும் படத்தின் முயற்சியை வெகுவாக பாராட்டி இருந்தனர். ஆனாலும் சில குறைகள் இருக்கவே தான் செய்தன. VFX எஃபெக்ட், அனிமேஷன் போன்றவற்றில் சில சொதப்பல்கள் இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் படம் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் யூகிக்கும் அளவிலேயே இருந்ததாகவும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது வழக்கமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் வழக்கம் போல் கேப்டன் படத்தையும் தனது பாணியில் திட்டி தீர்த்து இருக்கிறார். ஏலியன் என்ற பெயரில் சொறி நாய்க்கு கொம்பு வைத்தார் போல் ஒன்றை கூட்டி வந்துள்ளனர் என்று அவர் மரணமாக கலாய்த்து தள்ளினார். இந்த படம் பிரிடேட்டர் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்டது, ஆனால் பிரிடேட்டர் படத்தில் வரும் ஒரு சுவாரஸ்யம் கூட இந்த படத்தில் இல்லை என்று கூறினார்.

ஏலியனின் ரத்த மாதிரியை சேகரித்து வருமாறு ஒரு ஐந்து ஊசியை ராணுவ குழுவிடம் அனுப்பி வைத்துள்ளார்கள், அப்போது ஏலியன் ஹீரோ முகத்தில் காரில் துப்பி விடும். இது ஒரு கேடுகெட்ட ஐடியா, ஏலியன் காறித்துப்கியதை பார்க்கும் போது, இப்படி ஒரு படத்தை பார்க்க வந்தீர்களே என்று நம் முகத்தில் காரி துப்பியது போல் இருந்ததாக ப்ளூ சட்டை கடுமையாக விமர்சித்தார். மேலும் இந்த படத்தை பார்க்கப் போனால் ஏலியன் நம் முகத்திலும் காறி துப்பும் என்று ப்ளூ சட்டை விமர்சித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tamil Talkies