தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.. இனி இவருக்கு பதில் இவர்..!

விஜய் டிவியில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மற்றொரு சுவாரஸ்யமான தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் இருந்து ஒருவர் விலகியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மற்ற தொடர்களைப் போல இந்த தொடரில் பெரிய வில்லத்தனங்கள் ஏதுமில்லை, ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் கதைக்களங்களை வைத்தே இந்த கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ஹீரோ தமிழின் தாயார் கோதை. இவர் தான் முக்கியமான கதாபாத்திரம். இவர் பெயரில் கோதை இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.. இனி இவருக்கு பதில் இவர்..! 1

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் தமிழ். இரண்டாவது மகன் கார்த்திக். இதில் தமிழின் மனைவி தான் சரஸ்வதி. கார்த்திக்கின் மனைவி வசுந்தரா. வசுந்தராவின் தாய் ஒரு ஓய்வு பெற்ற துணை கலெக்டர் ஆவார். இந்த கதையில் வில்லத்தனங்களை செய்து வருவது வசுந்தராவின் தாயாரான ஓய்வு பெற்ற துணை கலெக்டர் சந்திரகலா தான். தன் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் செய்யும் வில்லத்தனங்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றது.

தொடர்புடையவை  பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த தமிழ் முன்னணி ஹீரோ.! ஷூட்டிங்கில் இருந்து கசிந்த வீடியோ இதோ

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.. இனி இவருக்கு பதில் இவர்..! 3

விளம்பரம்

இந்த சீரியலில் இருந்து தமிழ் மற்றும் கார்த்திக்கின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்த லாவண்யாவுக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதில் ராகினி கதாபாத்திரத்தில் இனிமேல் அஷ்ரிதா ஸ்ரீதாஸ் நடிக்க இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அஸ்விதா ஏற்கனவே விஜய் டிவியில் பல தொடர்களில் நடித்துள்ளார். தேன்மொழி சீரியலில் தேன்மொழிக்கு தங்கையாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை.. இனி இவருக்கு பதில் இவர்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment