மனைவிக்கு சுய தொழில்.. மனைவி பெயரில் 50 லட்சத்தில் வீடு..ராஜ்கிரணுக்கு பதிலடி கொடுத்த முனிஷ் ராஜா

தன்னுடைய மனைவிக்கு புதிய தொழில் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும் மனைவிக்காக 50 லட்சத்தில் வீடு கட்டி வருவதாகவும் ராஜ்கிரணின் மகளின் கணவரான முனீஸ் ராஜா தெரிவித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் முனீஸ் ராஜா. பின்னர் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இவர் நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். முகநூல் மூலம் ஏற்பட்ட நட்பு பின்னர் படிப்படியாக வளர்ந்து காதலாக மாறி பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்திற்கு ராஜ்கிரணும், அவருடைய மனைவியும் சம்மதித்ததாக தெரியவில்லை. இந்த தகவல் தீயாய் பரவ ஆரம்பித்த நிலையில் ராஜ்கிரண் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மனைவிக்கு சுய தொழில்.. மனைவி பெயரில் 50 லட்சத்தில் வீடு..ராஜ்கிரணுக்கு பதிலடி கொடுத்த முனிஷ் ராஜா 1

விளம்பரம்

அதில் அவர் ஜீனத் பிரியா என்ற இந்து பெண்ணை தான் வளர்த்து வந்ததாகவும், அவருக்கு வளர்ப்பு மகள் என்று தெரிந்தால் மனது சங்கடப்படுவாரே என்பதனால் சொல்லாமல் வளர்த்து வந்ததாகவும், தன்னுடைய பெயரையும் புகழையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜீனத் பிரியாவை முனீஸ் ராஜா அழைத்துச் சென்று விட்டதாகவும் அறிக்கையில் கூறி இருந்தார். மேலும் தானும் தனது மனைவியும் எவ்வளவோ மன்றாடியும் அந்தப் பெண் கேட்கவில்லை, உறவினர் ஒருவரை பார்க்க சென்று விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த நபருடன் ஓடி விட்டார், பணத்திற்காக அலையும் ஈனப்பிறவி முனீஸ் ராஜா என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளில் ராஜ்கிரன் விலாசி இருந்தார்.

தொடர்புடையவை  H.வினோத்துடன் இணைந்து கமல் நடிக்கும் 233வது படத்திலிருந்து வெளியான மாஸ் வீடியோ..!

மனைவிக்கு சுய தொழில்.. மனைவி பெயரில் 50 லட்சத்தில் வீடு..ராஜ்கிரணுக்கு பதிலடி கொடுத்த முனிஷ் ராஜா 3

விளம்பரம்

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத முனீஸ் ராஜா தன்னுடைய மனைவியும் நானும் விரைவில் திருமண பத்திரிக்கையுடன் வந்து உங்களை சந்திப்போம். ரிசப்ஷன் நடத்த இருக்கிறோம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது மனைவிக்காக சொந்த தொழில் தொடங்க இருக்கிறேன், அதனுடைய திறப்பு விழாவிற்கு உங்கள் அனைவரையும் அழைப்பேன். மேலும் என் மனைவி பெயரில் ஊரில் ஒரு 50 லட்சத்திற்கு வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அதற்கும் உங்களை எல்லாம் அழைப்பேன் என்று பேசியிருக்கிறார். இது பணத்திற்காக தான் ஜீனத் பிரியாவை காதலித்து வந்திருப்பதாக ராஜ்கிரண் கூறி வரும் இருக்கும் நிலையில், அவருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக முனீஸ் ராஜா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: i think sakthi

விளம்பரம்

Leave a Comment