விஜய் டிவி சீரியல் நடிகைக்கு போன் போட்டு வாழ்த்திய அனுஷ்கா.. எந்த சீரியல்ன்னு தெரியுமா?

விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியல் ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த போதும் தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக பவி நடித்துக் கொண்டிருக்கிறார். வினோத் பாபு வெற்றியாகவும், பவித்ரா அபியாகவும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். வினோத் பாபு முதலில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில்தான் அறிமுகமானார். அந்த சீரியலில் தேஜஸ்வியினுடன் இவர் நடிப்பு அருமையாக இருந்தது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு அள்ள தற்போது தென்றல் வந்து என்னைத் தொடு சீரியலிலும் அசத்தி வருகிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு போன் போட்டு வாழ்த்திய அனுஷ்கா.. எந்த சீரியல்ன்னு தெரியுமா? 1

விளம்பரம்

ரவுடியாக வரும் வெற்றி சூழ்நிலை காரணமாக பெரிய வக்கீலின் மகள் அபியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். பின்னர் வெற்றிதான் தன் கணவர் என்று அவர் குடும்பத்தில் சென்று வாழ ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அபியை ஏற்றுக் கொள்ளாத வெற்றி பின்னர் அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் அபிக்கு இன்னொரு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அதில் போராடி அபியை தன்னுடன் வாழ அழைத்து வந்துள்ளார் வெற்றி. இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். ப்ரோமோ வெளியான சில மணித்துளிகளில் பல லட்சம் பார்வையாளர்களை அள்ளுவது வழக்கம்.

தொடர்புடையவை  கடைசியாக அமர்ந்திருந்த இரண்டு பேர்.! கார்டை காட்டிய கமல்.! வெளியேறியது யாருனு தெரியுமா?

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு போன் போட்டு வாழ்த்திய அனுஷ்கா.. எந்த சீரியல்ன்னு தெரியுமா? 3

விளம்பரம்

தற்போது இந்த நாடகத்தை நடிகை அனுஷ்காவே பாராட்டி இருப்பதாக கதாநாயகி பவித்ரா தனது instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இதை பிராங் கால் என்று நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அது நம் தேவசேனா தான் என்றும் பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறும் பொழுது, இது தாமதமான பதிவு தான், ஆனால் என்னுடைய உணர்ச்சிகளை வார்த்தைகளாக மாற்றுவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. ஒரு நாள் சோர்வாக இருந்தேன், அன்று அனுஷ்காவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை நான் முதலில் பிராங்க் கால் என நினைத்தேன். ஆனால் அது உண்மையிலேயே நம்முடைய தேவசேனா தான். அவர் தென்றல் வந்து என்னை தொடும் தொடரை பற்றி பாராட்டுவதற்காகவே என்னை அழைத்து இருந்தார். அந்த நாடகத்தைப் பற்றியும் எங்களைப் பற்றியும் அவர் பாராட்டும் பொழுது அவர் மீதான மரியாதை எல்லைகளைக் கடந்தது.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு போன் போட்டு வாழ்த்திய அனுஷ்கா.. எந்த சீரியல்ன்னு தெரியுமா? 5

விளம்பரம்

மேலும் அவர் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை பார்ப்பதாகவும் கூறியிருந்தார். இதை எழுதும் போது கூட நான் வானத்தில் மேகங்களில் மிதப்பது போல் உணர்கிறேன். இதையெல்லாம் நினைக்கும் பொழுது ஏதோ மாயாஜாலம் போல் இருக்கிறது என்று பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment