கனவுகளுடன் சென்னைக்கு புறப்பட சந்தியா.! பிரேக் டவுன் ஆகி நிற்கும் பஸ்.! என்ன செய்ய போகிறார் சரவணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. ராஜா ராணி சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. சீசன் 2 வின் பின்னணி கதையை ஆராயும் பொழுது ,அது விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பான என் கணவன் என் தோழன் என்னும் ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக் இன் கதை ஆகும். ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கும் ஒரு பெண்ணின் தாயும் தந்தையும் ஒரு விபத்தில் இறந்து விடுவார்கள். இதனால் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவருக்கு அந்த பெண்ணை அவரது அண்ணன் படித்த பையன் என்று சொல்லி திருமணம் செய்து வைத்துவிடுவார். இதன் பின்னர் அந்தப் பெண்ணின் கனவை புரிந்து கொள்ளும் கணவர், அவரை ஐபிஎஸ் ஆக்குவாரா என்பது குறித்த கதை தான் ராஜா ராணி 2. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கனவுகளுடன் சென்னைக்கு புறப்பட சந்தியா.! பிரேக் டவுன் ஆகி நிற்கும் பஸ்.! என்ன செய்ய போகிறார் சரவணன் 1

விளம்பரம்

அந்தப் பெண் ஐபிஎஸ் ஆவதற்கு ஏற்படும் தடங்கல்களும், அதை மீறி எவ்வாறு ஐபிஎஸ் ஆகிறார் என்பதும் குறித்த கதையாக இது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஹீரோவாக நடிகர் சித்துவும் ஹீரோயினாக நடிகை ரியா விஸ்வநாதனும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்து வந்தார். பின்னர் அவர் கர்ப்பமாக இருந்ததால் நாடகத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது இந்த நாடகத்தில் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து சந்தியாவை ஐபிஎஸ் நேர்காணலுக்கு மாமியார் சிவகாமி அனுப்பி வைக்கிறார். பல தடைகளை கடந்து நேர்காணலில் பங்கெடுப்பதற்காக தென்காசியில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் சந்தியாவும் சரவணனும் புறப்பட்டு செல்கின்றனர்.

தொடர்புடையவை  "இதுக்கு ஸ்ருத்திகா தான் காரணம்"!! உண்மையை உடைத்த குரோஷி"!!

கனவுகளுடன் சென்னைக்கு புறப்பட சந்தியா.! பிரேக் டவுன் ஆகி நிற்கும் பஸ்.! என்ன செய்ய போகிறார் சரவணன் 3

விளம்பரம்

எதிர்பாராத விதமாக பேருந்து பழுதாகி நடு வழியிலேயே நிற்கிறது. காலையில் நேர்காணலுக்கு செல்ல வேண்டிய சந்தியா நடு வழியில் நின்று கொண்டிருக்கிறார். சரவணன் எப்படியாவது அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடி ஓடி சென்று மற்ற வாகனங்களிடம் லிப்ட் கேட்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment