கோபிக்கு எதிராக திரும்பிய ஈஸ்வரி.! என்ன மீறி கல்யாணம் பண்ணிடுவியா? கடும் கோபத்தில் ஈஸ்வரி

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபி ராதிகா திருமணம் குறித்த கதை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் இரவு 8:30க்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. பாக்கியாவை கோபி விவாகரத்து செய்துவிட்டு தனது காதலியான ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒரு சிறிய பார்ட்டி ஹாலை வாடகை எடுத்து அங்கு வைத்து திருமணத்தை முடித்துவிட்டு, நண்பர்களுக்கு பார்ட்டியும் கொடுப்பதற்காக கோபியும் ராதிகாவும் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக திருமண ஹாலுக்கு வாடகையும் கொடுத்து விட்டன.ர் ஆனால் அங்கு ஒரு திருப்பமாக அந்த திருமண ஹாலில் சமையல் ஆர்டரை பாக்கியா தான் எடுத்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கோபிக்கு எதிராக திரும்பிய ஈஸ்வரி.! என்ன மீறி கல்யாணம் பண்ணிடுவியா? கடும் கோபத்தில் ஈஸ்வரி 1

விளம்பரம்

ஆனால் இந்த விஷயம் கோபிக்கு தெரியாது. பாக்கியாவிற்கும் தான் தனது கணவரின், இரண்டாவது திருமணத்திற்கு தான் சமைக்கிறேன் என்பதும் தெரியாது. இந்த நிலையில் திருமண வேலைகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு தேவையான துணிகளை எடுக்க, கோபி ராதிகா மற்றும் அவரது தாயார் ஆகியோர் செல்வது போன்ற இன்றைய எபிசோடு முடிகிறது. இந்த நிலையில் கோபி தனது மகள் இனியாவிற்கும் துணி எடுக்க வேண்டும் என்று ராதிகாவிடம் கேட்கிறார். ராதிகாவும் அதற்கு சம்மதிக்கிறார். இனியாவிற்கும் துணி எடுக்கலாம், நானே அவளுக்கு துணியை தேர்வு செய்து கொடுக்கிறேன் என்று பெருந்தன்மையாக கூறுகிறார். ஆனால் ராதிகாவின் அம்மா அதை எதிர்க்கிறார். அந்த குடும்பத்தை பற்றி இனி எதுவுமே பேசக்கூடாது என்று ராதிகாவிற்கு கட்டளை இடுகிறார்.

தொடர்புடையவை  சிறந்த ஹீரோவுக்கான விஜய் டெலிவிஷன் விருதை வாங்கிய சிறகடிகை ஆசை வெற்றிவசந்த்..! கண்கலங்கிய நாயகி கோமதி..!

கோபிக்கு எதிராக திரும்பிய ஈஸ்வரி.! என்ன மீறி கல்யாணம் பண்ணிடுவியா? கடும் கோபத்தில் ஈஸ்வரி 3

விளம்பரம்

இப்போது ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த ப்ரோமோவில் தனது தாயார் ஈஸ்வரியை கோவிலில் வைத்து சந்திக்கிறார் கோபி. பின்பு அவரிடம் தான் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறுகிறார். ஆனால் இதை ஈஸ்வரி கடுமையாக எதிர்க்கிறார். நீ என்ன செய்தாலும் சகித்துக் கொண்டு உன் பின்னாலே வருவேன் என்று நினைத்தாயா? என்று கடுமையாக கேட்டுவிட்டு, உன் கல்யாணம் எப்படி நடக்கிறது என்று நானும் பார்க்கிறேன். என்று கோபியிடம் சவால் விடுகிறார் அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment