
கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து சாலை விபத்தில் சிக்கி காலை இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். அத்துடன் ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் அறிவித்துள்ளார்.கோவை சிங்காநல்லூர் ஊரை சேர்ந்தவர் அனுராதா ராஜேஸ்வரி இவர் கடந்த வாரம் நீலாம்பூர் அருகே பைக் விபத்தில் சிக்கி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் இவர் மீது சாய்ந்து, நிலைதடுமாறி, லாரி மீது மோதினார்.
இந்த விபத்தில் பெரும் காயம் அடைந்த அனுராதா ராஜேஸ்வரிக்கு கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இவரின் ஒரு கால் விபத்து காரணமாக எடுக்கப்பட்டுள்ளது.கோவையில் அதிமுக கட்சியினர் வைத்த கொடி கம்பம் காரணமாக சாலை விபத்தில் காலை இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதற்காக தெரிவித்துள்ளார்.
இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் பேட்டி அளித்தார். அதில், ராஜேஸ்வரிக்கு தீவிரமாக சிகிச்சை நடந்து வருகிறது. ராஜேஸ்வரின் கால் அகற்றப்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ அதிமுக பேனர் விழுந்துதான் பலியானார். அவர் பிராமண வகுப்பை சார்ந்தவர். அதற்கு இன்னும் முழு நீதி கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இவரும் பிராமண வகுப்பை சார்ந்தவர், என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக லாரி ஓட்டுனரை கைது செய்துள்ளார்கள். ஆனால் இதற்கு காரணமான அதிமுகவினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து நடந்ததே தெரியாது என்று முதல்வர் அலட்சியமாக கூறி இருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தெரியாது என்று அவர் அப்போது கூறினார்.அதேபோல் மீண்டும் இப்போது சொல்லி இருக்கிறார். அவர் முதல்வராக இருந்து கொண்டு இப்படி பேசுவது கோபம் அளிக்கிறது, அதிர்ச்சி தருகிறது. ராஜேஸ்வரியை காக்க அரசு முயல வேண்டும். இதற்கான முழு செயலையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்