பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி.! மீனா அப்பா செய்த சூழ்ச்சி.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. தற்போது கதையின்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டுவிட்டு புது இடம் வாங்கி வீடு கட்டலாம் என்று வீட்டில் உள்ள அனைவரும் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் அந்த வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. வந்த சிலரும் விலை அதிகமாக இருப்பதாக கூறி வாங்காமல் சென்று விட்டனர். ஆனால் மீனாவின் அப்பாவோ இந்த வீட்டை நீங்கள் கேட்கும் விலையை விட கூடுதலாக கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் மூர்த்தி சொந்தக்காரர்களிடம் கொடுக்கல் வாங்கல் சரி வராது என்று யோசித்து வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி.! மீனா அப்பா செய்த சூழ்ச்சி.! 1

விளம்பரம்

ஆனால் மீனா மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்திய காரணத்தால் மூர்த்தி மீனாவின் அப்பா ஜெகநாதனுக்கே வீட்டை விற்க முடிவு செய்துவிட்டார் மூர்த்தி. ஜெகநாதனும் முன்பணமாக 10 லட்சம் ரூபாயை கொண்டு வந்து மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க இறங்கி விட்டார். வீட்டை விட்டு வெளியே சென்ற கதிரும் வீட்டை விற்கும் முடிவிற்கு இசைவு தெரிவித்து விட்டார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று இருக்கின்றனர். அங்கு வைத்து மீனாவின் அப்பா ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை கொடுக்கிறார். வீட்டை விற்க அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போடுகின்றனர். மேலும் சாட்சி கையெழுத்திற்காக தனம் மற்றும் ஐஸ்வர்யாவை கையெழுத்து போடும்படி மீனா கூறுகிறார்.

தொடர்புடையவை  விஜய் டிவி பிரபலத்துடன் நடித்துள்ள தனலட்சுமி.! அப்போ பிக்பாஸ்ல சொன்னது எல்லாம் பொய்யா?

 

விளம்பரம்

பின்னர் அனைவரும் கையெழுத்திட்ட பின்பு ஜெகனாதனிடம் பதிவாளர் கையெழுத்து போட சொல்லி கேட்கும் பொழுது, அவர் பேனாவை மீனாவிடம் கொடுத்து மீனாவை கையெழுத்து போட சொல்கிறார். அப்பொழுதுதான் இந்த வீட்டை மீனா பெயரில் அவரது தந்தை வாங்கி இருப்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இது மீனாவுக்கும் தெரியாது. இதனால் மீனா உட்பட அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைகின்றனர். மூர்த்தி எதை நினைத்து பயந்து கொண்டு இருந்தாரோ அதுவே தற்போது நடக்கிறது. மீனாவின் அப்பா செய்த சூழ்ச்சியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்த புயல் கிளம்ப இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below Video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment