ஜெயம் ரவியை நடிகர் ஜெயராம் சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழில் ஜெயம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவர் இதற்குப் பின் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரமான, ராஜராஜ சோழனாக நடித்து வருகிறார். தமிழகத்தை ஆண்ட வலிமையான சோழ வம்சத்தில் மிக உயர்ந்தவராக கருதப்படுபவர் ராஜராஜ சோழன். இவர் ஆட்சிக் காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யம் வடக்கே கங்கை வரையும், கிழக்கே ஒரிசா வரையும், தெற்கில் ஈழம், சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, சுமத்ரா தீவுகள் வரையும் பரவிச் சென்றது. அங்கிருந்த மன்னர்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோழ தேசத்தின் ஆட்சிப் பரப்பை விரிவு செய்த பெருமை இராஜராஜ சோழனையே சேரும். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ராஜராஜ சோழன் எவ்வாறு சோழ தேசத்தின் அரியணையை ஆபத்துகளில் இருந்து காத்தார் என்பது குறித்த கதை தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் தற்போது ராஜராஜ சோழனாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் ஆழ்வார்கடியான் நம்பி என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார். இவர்கள் எல்லோரும் தற்போது படத்தை பிரமோஷன் செய்வதற்காக கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி என சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மணிரத்னம், த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி என அனைவரும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பெங்களூருக்கு சென்ற அவர்கள் இன்று ஹைதராபாத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரை ஜெயராம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. மேலும் ஜெயம் ரவி பேசும்பொழுது எப்படி கதையில் ஆழ்வார்க்கடியான் நம்பி தன்னை பார்த்துக் கொள்வாரோ அதேபோல் நிஜத்திலும் தம்மை பார்த்து கொள்கிறார் என்று ஜெயராம் பற்றி பெருந்தன்மையாக பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Wonder Media