பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மணிமேகலை.. முதன் முறையாக அழைத்து விருந்து வைத்த அம்மா..

மணிமேகலை மற்றும் அவரது கணவரை முதல் முறையாக அவரது தாயார் அழைத்து விருந்து கொடுத்துள்ள வீடியோவை தனது யூட்யூப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர்தான் விஜே மணிமேலை. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அப்போது ஒரு நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது, அதில் நடன இயக்குனராக இருந்த ஹூசைனை பார்த்தவுடன் காதல் வந்துவிட்டது. இதனால் ஹைதராபாத் வரை போய் அவரை தேடிக் கண்டுபிடித்து காதலை வெளிப்படுத்தினார். ஆனால் இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2017ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வீடியோ கீழே உள்ளது.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மணிமேகலை.. முதன் முறையாக அழைத்து விருந்து வைத்த அம்மா.. 1

விளம்பரம்

பின்னர் சன்டிவியில் இருந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் மணிமேகலை. இதன் பின்னர் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்ப்பட்டது. லாக்டவுன் சமயத்தில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி Vlogs செய்யத் தொடங்கினர் இருவரும். இதன் மூலம் அவர்களுக்கு 1.5மில்லியன் Subscribers கிடைத்தனர். இதில் இவர்கள் இருவரும் செய்யும் குறும்புகளை பதிவேற்றி வருகின்றனர். பார்க்கவே செம்ம காமெடியாக இருக்கும். திருமணம் ஆன புதிதில் வீட்டில் ஆதரவு இல்லாத காரணத்தால் இருவரும் மிகவும் சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

தொடர்புடையவை  கணவருடன் பாலி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் சின்னத்திரை நடிகை Nakshatra Nagesh..!

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மணிமேகலை.. முதன் முறையாக அழைத்து விருந்து வைத்த அம்மா.. 3

விளம்பரம்

தற்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் மணிமேகலை. தன்னை எதிர்த்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டி வருகிறார். BMW கார், பைக், சொந்தமாக நிலம் வாங்கி அதில் வீடும் கட்டி வருகிறார். இதனால் 2017ம் ஆண்டு பெற்றோர் மீறி திருமணம் செய்து கொண்டதால் பேசாமல் இருந்து வந்த மணிமேகலையின் பெற்றோர்கள் தற்போது அவரிடம் நெருக்கமாகி உள்ளனர். மணி மற்றும் ஹுசைனை அழைத்து கறி விருந்து போட்டுள்ளார் மணிமேகலையின் அம்மா.! அந்த வீடியோவை மணிமேகலை தற்போது தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Hussain Manimegalai

விளம்பரம்

Leave a Comment