நயன் விக்கியின் திருமண டீசரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ் நிறுவனம்..!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தின் டீசர் வீடியோவை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஐயா என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்கு முன்பாக இவர் மலையாள டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளனியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் தமிழில் அறிமுகமான பின்னர் இவர் பல படங்களில் நடித்தார். 20 ஆண்டுகளில் 75 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்துள்ளார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நயன் விக்கியின் திருமண டீசரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ் நிறுவனம்..! 1

விளம்பரம்

சுமார் ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் தாய்லாந்து, ஸ்பெயின் என ஹனிமூனுக்கு போய்விட்டு வந்தனர். திருமணத்தின் போது இவர்களுடைய வீடியோ வெளியாகவில்லை. புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தது. அதற்கு காரணமாக சொல்லப்பட்டது திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு பல கோடிகளுக்கு நயன்தாரா விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது. திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும், நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகாமலே இருந்தது.

தொடர்புடையவை  "சுல்தான்" படக்குழுவினரிடம் நடிகர் கார்த்தி பிரியாவிடைபெற்றார்- படபடிப்பு முடிவடைந்தது.

நயன் விக்கியின் திருமண டீசரை வெளியிட்டது நெட்பிளிக்ஸ் நிறுவனம்..! 3

விளம்பரம்

இதனால் பலருக்கும் திருமண வீடியோவை பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக தெரிகிறது. எனவே விக்னேஷ் சிவனே ஒவ்வொரு புகைப்படங்களாக வெளியிடத் தொடங்கினார். தற்போது netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது திருமணம் குறித்து பேசுகின்றனர். மேலும் விரைவில் திருமண வீடியோ விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் அந்த டீசர் வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Netflix

விளம்பரம்

Leave a Comment