அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த “ரெண்டகம்” படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.!

அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்துள்ள ரெண்டகம் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். வெகு நாட்களுக்குப் பிறகு அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் தான் ரெண்டகம். இந்த படம் செப்டம்பர் இரண்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனையால் படம் தள்ளிக் கொண்டே போனது. தற்போது இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகியிருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த "ரெண்டகம்" படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.! 1

விளம்பரம்

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கௌதம் ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் கென்னடி என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் டிரைலர் வெளியான போது நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது படம் எப்படி இருந்தது என்பது குறித்த விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் முன் வைத்துள்ளார். ஹீரோவும் ஹீரோயினும் யூரோபில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு ஒரு லட்சம் யூரோ பணம் வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். இதனால் ஹீரோ ஒரு பெரிய ரவுடியை தேடி செல்கிறார். அங்கு ஹீரோ குஞ்சாக்கோ போபனுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  இஸ்லாமிய பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.! வித்தியாசமான கதையுடன் பர்ஹானா படத்தின் டீசர் வெளியானது.!

அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த "ரெண்டகம்" படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.! 3

விளம்பரம்

அதில் அரவிந்த்சாமி ஒரு பெரிய தங்க கடத்தல் மன்னன். ஆனால் ஒரு துப்பாக்கிச் சூட்டில் அவர் மண்டையில் அடிபட்டதால் அவருக்கு பழையது எல்லாமே மறந்து போயிருக்கும். ஹீரோ அவருடன் பழகி எப்படியாவது அவரின் பழைய நினைவுகளை கொண்டு வந்தால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம் என்று அந்த ரவுடி கும்பல் ஹீரோவுக்கு ஒரு டாஸ்கை கொடுப்பார்கள். ஹீரோவும் அரவிந்த்சாமியிடம் சென்று அவரின் பழைய நினைவுகளை கொண்டு வருவதற்கு எவ்வளவோ முயற்சிப்பார் ஆனால் அவருக்கு பழைய நினைவுகள் எதுவுமே வராது. இதனால் அந்த ரவுடி கும்பல் அரவிந்த்சாமியை தீர்த்து கட்ட முடிவு செய்திருக்கும். ஆனால் ஹீரோவுக்கு அரவிந்த்சாமி மேல் ஒரு பரிதாபம் வந்துவிடும். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.

அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த "ரெண்டகம்" படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.! 5

விளம்பரம்

இந்தப் படத்தைப் பார்க்கும்போது பல ஆங்கில திரைப்படங்கள் நம்மை ஞாபகத்திற்கு வந்து போகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள். அது வேற லெவல் ட்விஸ்ட் ஆக இருக்கிறது. அந்த ட்விஸ்ட் கதைக்கு அழகாக பொருந்தி இருந்தது. மேலும் கிளைமாக்ஸில் சிறிது தொதப்பல்களை ஏற்படுத்தி விட்டார்கள். ஸ்க்ரீன் பிளேவில் இன்னும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் இந்த படம் வேற லெவலில் வந்திருக்கும் என்று தனது விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் முன் வைத்தார். நீங்கள் அவரின் முழு விமர்சனத்தை காண.. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment