தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை கனிகா. இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் எனும் நாடகத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் தன் வாழ்க்கையில் சோகமான விஷயங்கள் குறித்து பேசி உள்ள வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்னும் திரைப்படத்தில் ஈஸ்வரி என்னும் கதாபாத்திரத்தின் மூலமாக அறிமுகமானவர் கனிகா. இவர் அதன் பின்னர் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு போன்ற படங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால், பின்னணி பேசுவதிலும், சின்னத் திரையிலும் காலடி எடுத்து வைத்தார். மேலும் சில படங்களில் பின்னணி பாடியும் இருக்கிறார்.

இவர் சச்சின், அந்நியன், சிவாஜி போன்ற பல படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி பேசி உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் மாரிமுத்து என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார். வரலாறு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது வயதான ஒருவருடன் நடிக்கிறாரே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். ஆனாலும் பொறுமையான பெண்ணாக நடித்து, அனைவர் மனதிலும் இடம் பிடித்து இருக்கிறார் கனிகா. இவர் வாழ்க்கையில் பல சோக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஒரு பேட்டியின்போது அதை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கர்ப்பமாக இருந்தபோது நடந்த விஷயங்களை கூறியிருக்கிறார். கர்ப்பம் தரித்தது முதல் தனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை, அந்தந்த மாதங்களில் எந்த மாதிரி சிம்டம்ஸ் இருக்க வேண்டுமோ அதெல்லாம் சரியாக இருந்தது.

கர்ப்பமாக இருந்த நேரத்தில் தனக்கும் எல்லா பெண்களுக்கும் செய்வது போல் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். ஆனால் தன்னுடைய குழந்தையை பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. குழந்தை பிறந்து உடனேயே தன்னிடம் காட்டவில்லை. மருத்துவர் வந்து குழந்தையின் இருதயத்தில் பிரச்சனை இருக்கிறது, இந்த இரவு வரை கூட அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று கூறினார். அப்போது கன்னிகாவிற்கு வாழ்க்கை வெறுத்தது போல் இருந்தது கூறினார். மேலும் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலையில் கூட, தன் மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக எழுந்து சென்றேன், அங்கு குழந்தையின் சுற்றி நூடுல்ஸ் போல பலர் டியூப்புகள் மாற்றப்பட்டிருந்ததாகவும், அதை பார்த்த பின்பு தன்னால் அடக்க முடியாமல் அங்கேயே கதறி அழுது விட்டதாகவும் கூறினார்.

அப்போது நான் வேண்டாத தெய்வம் இல்லை, குறிப்பாக நான் அதிகமாக நம்பும் சாய் பாபாவின் மீது தன்னுடைய பாரத்தை சுமத்தினேன். ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த குழந்தைக்கு ஒரு ஸ்ட்ராபெரி அளவில் இருந்த இதயத்தை ஏழு மணி நேரம் ஆப்ரேஷன் செய்து தனது மகனை பிழைக்கு வைத்து விட்டார்கள். அவரை நான் இப்போது கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறேன். அவர்தான் என்னுடைய உலகம் என்றெல்லாம் பேசி இருக்கிறார். பேசும் போது அவருடைய கண்கள் கலங்கி அவர் அழுதது பலரின் நெஞ்சத்தையும் கலங்க வைத்துள்ளது. அவருடைய முழு வீடியோவை நீங்களும் காண..
Youtube Video Code Embed Credits: Avalglitz