“திடீர் உடல்நல குறைவு…..மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் “சீயான்” விக்ரம் “!!

"திடீர் உடல்நல குறைவு.....மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் "சீயான்" விக்ரம் "!! 1

திரை துறை மீது கொண்ட காதலால் பல வருடனால் போராடி வாய்ப்பு பெற்று வெற்றி பெற்றவர்கள் அதிகம். அண்ட் ஆசையில் கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் தோற்றுபோனவர்களும் அதிகம். ஆனால் அந்த முயற்சியில் வென்று இந்திய அளவில் பேசப்படும் மிக சிறந்த நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். பின்னணியில் பிரபல நடிகர்கள் அஜித் மற்றும் பிரபுதேவாவிற்கு குரல் கொடுத்த இவர் தன்னுடைய வெற்றிக்காக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு. மலையாள மொழியை படங்களிலும் நடித்துள்ளார்.

விளம்பரம்

"திடீர் உடல்நல குறைவு.....மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் "சீயான்" விக்ரம் "!! 3

முயன்று கொண்டே இருந்த இவருக்கு வெற்றியை அளித்த படம் “சேது’. இயக்குனர் பாலா அறிமுகமான இந்த படம் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியானது, ஆனால் அப்போது பிரபலமான ஆனந்த விகடனின் விமர்சனம் மூலம் படம் பெரிய வெற்றியை பதிவு செய்ய உதவியது.  இன்றளவும் பிரபலம். கிடைத்த வெற்றியை கெட்டியாக பிடித்து கொண்டு சியான் அடுத்தடுத்து படங்கள் மூலம் வெற்றியை கொடுக்க துவங்கினார். சேது படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட பெயரே சீயான்/ அந்த அப்படத்தின் வெற்றி இவரை இன்றளவும் சியானாகவே மக்களிடம் காட்டுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் பூஜை நடத்திய காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டி.!

"திடீர் உடல்நல குறைவு.....மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் "சீயான்" விக்ரம் "!! 5

தில், தூள், கிங், சாமீ, அருள், பிதாமகன், அந்நியன், கந்தசாமி, ஐ, இராவணன் போன்ற வெற்றிப்படங்கள் கொடுத்துள்ளார். அண்மையில் வெளியான இவருடைய “மகான்> படம் திரையரங்கில் வந்துஇருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். அந்த படமும் அந்த அளவிற்கு சிறப்பான ஒரு படமாக அமைந்தது. இப்பொது இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் “துருவ நட்சத்திரம்”, அஜய் ஞானமுத்துவின் “கோப்ரா”, மணிரத்னனத்தின் “பொன்னியின் செல்வன்” மற்றும் பெயரிடிப்படாத பா.ரஞ்சித் படம் என அனைத்துமே சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார்.

விளம்பரம்

இன்று தற்போது திடீரென உடல்நல குறைவால் அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். சென்னை காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலிக்காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டாலும் இப்பொது வரை எதனால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவில்லை.

இது குறித்த அடுத்தகட்ட செய்திகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது

விளம்பரம்

Video Courtesy – thanthi tv

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment