விஜய் டிவி சீரியலில் இருந்து விலகி கன்னட பிக்பாஸ் சென்ற நடிகை.! அவரே வெளியிட்ட பதிவு.! யாருனு பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியல் நடிகை தற்போது பிக்பாஸ்க்குள் நுழைந்துள்ள செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதனால் இந்த தொடர் இறுதி கட்டத்தை அடைய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் நவீன். இவரை ஹீரோவாக வைத்து ஒரு நாடகத்தை விஜய் டிவி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. அதுதான் பாவம் கணேசன். இதில் கணேசன் ஆக குடும்ப பாரத்தை தாங்கும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக நவீன் சிறப்பாக நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நேஹ ராமகிருஷ்ணா நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு என்கிற தொடரின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகி கன்னட பிக்பாஸ் சென்ற நடிகை.! அவரே வெளியிட்ட பதிவு.! யாருனு பாருங்க 1

விளம்பரம்

பாவம் கணேசன் நிகழ்ச்சி மதியம் ஒளிபரப்பப்படுவதால் அதற்கு டிஆர்பி ரேட்டிங் அவ்வளவாக இல்லை என்று சமீபகாலமாகவே கூறப்பட்டு வந்தது. மேலும் இந்த நாடகம் முடிய உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சீரியலின் கதாநாயகி நேஹா ராமகிருஷ்ணா தற்போது சீரியலை விட்டு விலகி பிக்பாஸ்க்கு சென்று இருக்கிறார். கலர்ஸ் கன்னடாவில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் கன்னடா சீசன் 19ல் தேஹா ஒரு போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். அது குறித்து அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  பிறந்தநாளில் முதியவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி பரிசளித்த KPY பாலா..! வைரலாகும் காணொளி இதோ

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகி கன்னட பிக்பாஸ் சென்ற நடிகை.! அவரே வெளியிட்ட பதிவு.! யாருனு பாருங்க 3

விளம்பரம்

பல அழகான நினைவுகளை பிக்பாஸ் வீட்டில சேர்த்துக் கொள்ளப் போகிறேன். பேசுவதை திரித்து சொல்லும் பழக்கம் எனக்கு கிடையாது. நெகட்டிவ் ஆகவோ தேவையில்லாமலோ யாரிடம் பேசமாட்டேன். அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் பேச மாட்டேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் மேலும் இவர் திருமணம் ஆகி பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வருகிறார். பாவம் கணேசன் சீரியலில் சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், பிக்பாஸில் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நேகாவின் விலைகள் மற்றும் தமிழ் பிக் பாஸ் இன் ஆரம்பம் ஆகியவற்றால் பாவம் கணேசன் சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகி கன்னட பிக்பாஸ் சென்ற நடிகை.! அவரே வெளியிட்ட பதிவு.! யாருனு பாருங்க 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment