பகாசூரன் படத்துக்காக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யும் மன்சூர் அலிகான்.! யப்பா என்னா எனர்ஜி

இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தான் பகாசூரன். இந்த படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இருந்து தற்போது ஒரு பாடலுக்காக மன்சூர் அலிகான் ஒத்திகை செய்யும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற சர்ச்சை படங்களை எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் மோகன் ஜி. அவர் தற்போது செல்வராகவனை முக்கியமான கதாபாத்திரத்தில் வைத்து எடுத்து வரும் படம்தான் பகாசூரன். வழக்கம் போல இந்தப் படமும் ஏதோ ஒரு சர்ச்சையை மையமாக வைத்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்போது இந்த படமும் பல சர்ச்சைகளை கிளப்பும் என்பது உறுதியானது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பகாசூரன் படத்துக்காக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யும் மன்சூர் அலிகான்.! யப்பா என்னா எனர்ஜி 1

விளம்பரம்

படத்தில் செல்வராகவன் தவிர நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, ராதாரவி, கூல் சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திலிருந்து “சிவ சிவமயம்” என்ற பாடலும், டீசரும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. டீசரில் உங்கள் பிள்ளைகள் அறையின் கதவுகளை மூடிக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டும் என்ற வசனங்கள் இருந்தது. ஏற்கனவே நாடகக் காதல், சாதி மோதல்களைப் பற்றி படங்களை எடுத்த மோகன் ஜி தற்போதும் ஏதோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது. இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் அடுத்த பாடலுக்காக மன்சூர் அலிகான் ரிகர்சல் செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  அசுரன் வெற்றிக்கு தனுஷ் தான் காரணம்

பகாசூரன் படத்துக்காக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யும் மன்சூர் அலிகான்.! யப்பா என்னா எனர்ஜி 3

விளம்பரம்

மன்சூர் அலிகான் ஒத்திகை செய்யும் வீடியோவை இணைவாசிகள் இன்டர்நெட்டில் பரப்பி வருகின்றனர். கேப்டன் பிரபாகரன் படத்தில் தொடங்கி மன்சூர் அலிகான் குத்தாட்டம் மிக பேமஸ் ஆக இருக்கிறது. தற்போது கூட அவர் எங்கு சென்றாலும் ஒரு குத்தாட்டம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் பகாசூரன் படத்திற்காக அவர் ஒரு பாடலுக்காக ஒத்திகை செய்தது வருகிறார். இந்தப் பாடல் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Web theater

விளம்பரம்

Leave a Comment