வந்திய தேவனுக்கு tough கொடுக்கும் கூல் சுரேஷ்.! வாடகை குதிரையில் வந்து அலப்பறை

நடிகர் கூல் சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்காக குதிரையில் வந்து இறங்கினார். அப்போது அவர் பேசும்பொழுது தன் செயினை அடமானம் வைத்துவிட்டு அந்த பணத்தில் தான் இந்த குதிரையை வாடகைக்கு எடுத்து வந்தேன் என்று அவர் பேசியுள்ள காணொலி தற்போது வைரலாகி இருக்கிறது. நடிகர் கூல் சுரேஷ் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இணையவாசிகள் அனைவருக்கும் பரிச்சயமானவர் கூல் சுரேஷ். இவர் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு, வித்தியாசமான முறையில் விமர்சனங்களை சொல்லி அதன் மூலமாக பிரபலமானவர். குறிப்பாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்திற்கு இரண்டு வருடங்களாக இலவசமாக ப்ரமோஷன் செய்தார். எந்த படங்கள் வெளியானாலும் வெந்து தணிந்தது காடு அந்த படத்திற்கு வணக்கத்தை போடு என்பதை டெம்ப்ளேட்டாக வைத்திருக்கிறார் கூல் சுரேஷ்.

வந்திய தேவனுக்கு tough கொடுக்கும் கூல் சுரேஷ்.! வாடகை குதிரையில் வந்து அலப்பறை 1

விளம்பரம்

 

இதனால் மகிழ்ந்து போன வெந்து தணிந்தது காடு பட தயாரிப்பாளர் சமீபத்தில் கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்திருந்தார். மேலும் கூல் சுரேஷின் குழந்தைகளின் படிப்பு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி இருந்தார். சிம்புவும் இத்தனை நாள் இந்த படத்திற்கு பிரமோஷன் செய்ததற்காக பேட்டியில் நன்றியும் கூறியிருந்தார். இது போல் அவர் ஒவ்வொரு படம் வெளியான போதும் அந்த படத்திற்கு சென்று பார்த்துவிட்டு அந்தப் படத்தைப் பற்றி விமர்சனம் செய்து இணையத்தை கலக்கி வந்தார். இந்த நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதற்காக குதிரையில் ஏறி வந்தார் கூல் சுரேஷ்.

விளம்பரம்
தொடர்புடையவை  6 வருடங்களுக்கு பிறந்த மகன்..! முதல் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ஸ்ரேயா கோஷல் | Shreya Ghoshal

வந்திய தேவனுக்கு tough கொடுக்கும் கூல் சுரேஷ்.! வாடகை குதிரையில் வந்து அலப்பறை 3

அப்போது அவர் பேட்டியளித்த அவர், இந்த படத்தில் விக்ரம் பயன்படுத்திய குதிரையை பார்த்தேன். அந்த குதிரை தான் வேண்டும் என்று அடம் பிடித்து தன்னுடைய தங்கச்செயினை அடமானம் வைத்துவிட்டு அந்த பணத்தில் தான் குதிரையை வாடகைக்கு எடுத்து படம் பார்க்க வந்ததாக கூறினார். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் சிம்புவுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அவரின் முழுப் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Shorts Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment