செம்ம கெத்தாக மேடையில் ஏறி தேசிய விருதை வாங்கிய சூர்யா. கரகோஷத்தால் அதிர்ந்த அரங்கம்

நடிகர் சூர்யா தற்போது தனது மனைவி ஜோதிகாவுடன் 68வது தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. பிரபல திரைப்பட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் தான் சூர்யா. இவருக்கு சூரரைப் போற்று்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூரரைப் போற்று. எளிய மக்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக சொந்தமாக ஏர்லைன்ஸ் தொடங்கிய ஏர் டெக்கான் வானூர்தி நிறுவனத்தை தொடங்கிய கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி இருந்தார். படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

செம்ம கெத்தாக மேடையில் ஏறி தேசிய விருதை வாங்கிய சூர்யா. கரகோஷத்தால் அதிர்ந்த அரங்கம் 1

விளம்பரம்

இந்தத் திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இது அவரின் முதல் தேசிய விருது ஆகும். எனவே அவர் விருந்து வழங்குவதை பார்ப்பதற்காக அவருடன் மனைவி ஜோதிகா, மகன் தேவ், மகள் தியா ஆகியோர் உடன் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களது வீடியோ வைரலானது. மேலும் இந்த படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த இயக்குனராக சுதா கொங்காரா, சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையவை  அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இணைந்து நடிக்கும் தண்டகாரண்யம் படத்தின் First Single வெளியாகியது ..!

செம்ம கெத்தாக மேடையில் ஏறி தேசிய விருதை வாங்கிய சூர்யா. கரகோஷத்தால் அதிர்ந்த அரங்கம் 3

விளம்பரம்

செம்ம கெத்தாக மேடையில் ஏறி தேசிய விருதை வாங்கிய சூர்யா. கரகோஷத்தால் அதிர்ந்த அரங்கம் 5

செம்ம கெத்தாக மேடையில் ஏறி தேசிய விருதை வாங்கிய சூர்யா. கரகோஷத்தால் அதிர்ந்த அரங்கம் 7

விளம்பரம்

தற்போது இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: TFPC

விளம்பரம்

Leave a Comment